சென்னையில் முதன் முதலில் ஹோம் சலூன் சர்வீஸை அறிமுகப்படுத்திய வளர்மதி

  Shalini Chandra Sekar   | Last Modified : 25 Mar, 2018 11:13 am


‘ஒரு பியூட்டி பார்லருக்குப் போக நேரமில்ல, கிடைக்குற அரை மணி நேரம் அங்க போய் சேர்றதுக்கே சரியா இருக்குமே, என்ன பண்றது’ என யோசித்தவர்களுக்காக சென்னையில் முதன் முதலில் ‘ஹோம் சலூன் சர்வீஸை’ அறிமுகப்படுத்தியவர் தான் வளர்மதி விஸ்வநாதன். 

இன்ட்ஸ்ட்ரியல் பயோ டெக்னாலஜி முடித்தவர் எப்படி இந்தத் துறைக்குள் வந்தார் என தனது பயணத்தைப் பற்றி நம்மிடம் பேசத் தொடங்கினார். 'எனக்கு சொந்த ஊர் விருத்தாச்சலம். ஸ்கூல் முடிச்சிட்டு, அண்ணா யுனிவர்சிட்டில பி.டெக் இன்டஸ்ட்ரியல் பயோடெக்னாலஜி முடிச்சேன். சின்ன வயசுல இருந்தே பிஸினஸ் மேல ஒரு காதல் இருந்துச்சி. ஆனா வீட்ல ஏத்துப்பாங்களாங்கற சந்தேகம் வேற. சென்னைல இருக்குறதுக்கு நமக்கு ஒரு காரணம் வேணும் அதுக்காக சி.டி.எஸ் ல வேலைக்கு சேந்தேன். ஒரு 5 மாசம் கழிச்சி, பிஸினஸ்ல இறங்கிட்டேன். 

பிஸினஸ்ன்னு முடிவு பண்ணுனதுமே, பெண்கள் தான் என் மைண்ட்ல வந்தாங்க. பெண்கள் மொத்த வீட்டையும் கவனிச்சுக்குறாங்க, ஆனா அவங்களுக்குன்னு நேரம் ஒதுக்குறது இல்ல. அவங்களுக்குப் பிடிச்ச உணவ எத்தனை பேர் சமைச்சி சாப்பிடுவாங்கன்னு கூட கை விட்டு எண்ணிடலாம். ஸோ, அவங்களோட உடல் மற்றும் ஆரோக்கியம் தான் முக்கியமா பட்டுச்சி. இத நான் ஏன் ஒரு வாக்-இன் சலூனா வைக்கலன்னா, ஒரு பெடிக்யூர் பண்ண 30 நிமிடம் தான், அதுக்கு அவங்க டிரெஸ் பண்ணி கிளம்ப ஒரு 30 நிமிடம், வீட்ல இருந்து அவங்க பார்லர் போய் சேர இன்னொரு 30 நிமிடம், திரும்பி வர மற்றுமொரு 30 நிமிடம்ன்னு 30 நிமிட வேலைக்கு எக்ஸ்ட்ராவா ஒன்றரை மணிநேரம் செலவழிக்கனும். அந்த டைம்ல அவங்க வீட்லயே ரெஸ்ட் எடுத்து ரிலாக்ஸ் ஆவாங்க. ஒரு சர்வீஸ் எடுத்துட்டு அவங்க ரெஸ்ட் எடுத்தாதான் நல்லது. பட் பார்லருக்கு போய் எல்லாத்தையும் பண்ணிட்டு திரும்பவும் வீட்டுக்கு வரும்போது டயர்டாகிடுவாங்க, இதனால அவங்களோட ஃப்ரெஷ்னஸ் உடனே போய்டும். அதனால தான் இந்த ‘5ஹெச்.டி ஹோம் சலூன’ ஆரம்பிச்சேன். என்னோட எண்ணமே சோர்வில்லாத இந்தியா தான். 

சர்வே லிஸ்ட்ல சோர்வுல அவதிப்படுற பெண்கள் பிரிவுல இந்தியா தான் டாப் இடத்துல இருக்கு. மத்த நாட்டு பெண்கள கம்பேர் பண்ணும்போது, அதிகமான ஒர்க்கிங் நேரமும் நமக்கு தான். இதெல்லாத்தையும் முடிஞ்சளவு குறைக்கனும்ங்கறது தான் என்னோட இலக்கு. 2013ல 3 தெரபிஸ்ட வச்சி தான் நான் இத தொடங்குனேன். 3 மாசத்துல இன்னும் 3 பேர வேலைக்கு அமர்த்தினேன். இப்போ மொத்தம் 12 பேர் வேலை செய்றாங்க. இன்வெஸ்மென்ட்ன்னு பெருசா ஒன்னும் இல்ல, 2 நாளைக்கு தேவையான புராடக்ட்ஸ் வாங்கி தான் முதல்ல ஸ்டார்ட் பண்ணுனேன். போக போக நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. இப்போ சென்னை முழுக்க ஸ்பா & சலூன் சர்வீஸ் பண்றோம். தமிழ்நாடு முழுக்க மேக்கப் சர்வீஸ் பண்றோம். இத இந்தியா முழுக்கவே கொண்டு போகனும்ங்கறது தான் என்னோட பிளான். இந்த 4 வருஷ பயணம் ரொம்ப நல்லாருக்கு. முதன் முதல்ல எங்கக்கிட்ட வந்த கிளைண்ட், அவங்களோட ஃபிரெண்ட்ஸ், சொந்தக்காரங்கன்னு நிறைய பேர அறிமுகப்படுத்தி, இப்போ நாங்க ஒரு ஃபேமிலியா கூடியிருக்கோம். இப்போ 1000 ரெகுலர் கிளைண்ட்ஸ் இருக்காங்க.


(இந்தப் படத்தில் இருக்கும் சின்னத்திரை நடிகைக்கு வளர்மதியின் நிறுவனம் தான் மேக்கப் சர்வீஸ் செய்துள்ளது)

ஒரு ஃபேஷியல்ன்னு எடுத்துக்கிட்டா, ஒன்னு பங்ஷன் இல்ல ஸ்கின் டல்லா இருக்குன்னு தான் எல்லாரும் பண்ணுவாங்க. ஆனா யாரும் ஒரு குட் ஃபீலுக்காக பண்றது இல்ல. ஆனா லுக்கிங் குட்ட விட ஃபீலிங் குட் தான் ரொம்ப முக்கியம், அந்த விழிப்புணர்வ நாங்க ஏற்படுத்திட்டு இருக்கோம். வயசானவங்க எல்லாம் முதல் முறை பண்ணிட்டு, மனம் நெகிழ்ந்து எங்கள பாராட்டும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும். 

5ஹெச்.டின்னு ஏன் பேர் வச்சிருக்கீங்க?

இந்த பேஷியல், மசாஜ் எல்லாம் வெளிப்புற பயனுக்காகக் கிடையாது. இதெல்லாம் ஹோலிஸ்டிக் வெல்னெஸ்காக தான். மகிழ்ச்சிக்கான ஹார்மோன் செரொடோனின். இது நாம் சிரிச்சி சந்தோஷமா இருக்கும் போது, காதல்ல இருக்கும் போதுன்னு மகிழ்ச்சியா இருக்கும் போதெல்லாம் சுரகக்கும். இது ரத்தத்துல கலக்கும் போது, நம்ம செல்லுல இருக்குற டேமேஜ சரி பண்ணும். ஸோ, அதே மாதிரி நீங்க கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருந்து ஸ்பா சர்வீஸ் எடுத்துக்கும்போதும், இந்த செரொட்டோனின் சுரக்கும். இந்த செரொட்டோனினோட வேதியல் மூலக்கூறு, 5 ஹைட்ராக்ஸி ட்ரிப்டோமைன், அதனால தான் என்னோட இந்த சர்வீஸுக்கும் 5ஹெச்.டின்னு பேர் வச்சேன். 

  நாங்க ஹேர் கலரிங் & பிளீச் தவிர எல்லா சர்வீஸும் பண்ணுவோம். ஏன்னா நாங்க எந்த கெமிக்கல் புராடெக்டையும் யூஸ் பண்ண மாட்டோம். ஹேர் கலரிங், ஹேர் டை கண்ணுக்கு ரொம்ப கெடுதல். அதே மாதிரி கலரிங் பண்ணிட்டு என்ன தான் வாஷ் பண்ணுனாலும் அந்த கெமிக்கல்ஸ் போகாது. அது நம்ம ஸ்கின்னுக்குள்ள போர்ஸ் வழியா புகுந்துரும். அப்புறம் பிளீச்சிங்ல அதிக அளவு அமோனியா இருக்கு. நம்ம தோலுக்குள்ள போன எந்த பொருளுமே, நம்ம லிவர் & கிட்னி வழியாத்தான் வெளிய வரனும். ஸோ, அதனால நாங்க இந்த ரெண்டு சர்வீஸையும் பண்றது இல்ல. அதத்தவிர அரோக்கியம் தர்ற மத்த எல்லா சர்வீஸும் எங்கக்கிட்ட இருக்கு. இப்போ நாங்களே சொந்தமா புராடக்ட்ஸும் 'லாஞ்ச்' பண்ண போறோம். அதுக்கான வேலைகள் தான் வேகமா நடந்திட்டு இருக்கு. 

எங்க வீட்ல எல்லாரும் புரபஷனல்ஸ் அதனால எனக்கு பிஸினஸ் பேக்ரவுண்டெல்லாம் கிடையாது. நான் பிஸினஸ் ஆரம்பிச்சி லோன் மாதிரி ஏதாச்சும் வாங்கிட்டு அப்புறம் திரு திருன்னு முழிச்சா என்ன பண்றதுன்னு வீட்ல ஒரு கேள்வி இருந்தது. அப்பாவுக்கு நான் ஐ.ஏ.எஸ் ஆகனும்ங்கறது தான் ஆசை. பட் எனக்கு அறிவியல் ஆராய்ச்சில போகனும்ங்கறது தான் விருப்பமா இருந்துச்சி. ஆனா காலேஜ் ஃபைனல் இயர்ல தான் பிஸினஸ் பண்ணனும்ங்கற ஐடியா வந்துச்சி. இது சின்ன வயசுல இருந்து எனக்கு ஆப்ஷனா இருந்தது. ஆனா கரியரா பிஸினஸ பத்தி நா யோசிக்கல. அப்பா கொஞ்சம் பயந்தாரு. ஆனா இப்போ அவர் ரொம்ப ஹேப்பி. 

அப்புறம் உங்களுக்கு ஒரு டிப்ஸ் சொல்றேன்,

பிஸினஸ்ல இறங்கனும்ன்னு நினைக்கிறவங்க, உடனடியா ஆரம்பிச்சிடுங்க. பெர்ஃபெக்ஷன்னு ஒன்னு அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் வராது. அதனால உடனடியா ஆரம்பிச்சிட்டு, உங்களோட தவறுகள திருத்திக்கிட்டே வாங்க. அது தான் உங்கள மேலும் மேலும் வளர்ச்சியடைய செய்யும். அதையும் மீறி சொதப்பிடுச்சின்னா, நீங்க கத்துக்கப்போறீங்க, இல்லன்னா அத இன்னும் டெவலப் பண்ணுவீங்க. இன்னொன்னு காசு மட்டும் பிஸினஸுக்கு முக்கியம் இல்ல. அதனால காசு வரட்டும்ன்னு காத்துக்கிட்டு இருக்காதீங்க' என இந்த இளம் வயதில் ஒரு ஆழமான அனுபவத்தோடு புன்னகைக்கிறார் வளர்மதி.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close