இன்ஸ்டாகிராமை கலக்கும் நிறைமாத கர்ப்பிணியின் போல் டான்ஸ்!

  Padmapriya   | Last Modified : 29 Mar, 2018 04:49 pm

நிறைமாத கர்ப்பிணி பெண், மிகவும்  நளினமாக போல் டான்ஸ் ஆடும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டுவருகிறது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஆலிசான் ஸ்பஸ் தற்போது 9 மாத கர்ப்பிணி. ஆர்லாண்டோவில், ஆலிசான் உடற்பயிற்சி மற்றும் நடனம் பயிற்றுவிப்பாளராகப் பணிபுரிகிறார். இவர் ஒரு தொழில்முறை நடனக் கலைஞரும் கூட. போல் டான்சிங் ஆடுவதில் தனி ஈர்ப்பு கொண்டவர். 

கர்ப்ப காலத்தில் உடலில் ஏற்படும் அசாத்தியமான மாறுதல்களையும் அப்போது ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினைகளையும் தாண்டி, அவர் தொடர்ந்து நடனமாடுவதை நிறுத்தவில்லை. சமீபத்தில், ஆலிசான் இன்ஸ்டாகிராமில் அவரின் நடன வீடியோவை பகிர்ந்திருந்தார். 

சாதாரண நடன அசைவுகள் கொண்ட காட்சிகள் இல்லை அவை. சிரமமான போல் டான்ஸிங்கை (pole dance) தான் அவர் அவ்வளவு அசாத்தியமாகவும் நளினமாகவும் ஆடுகிறார். 


பலரும் இதனைக் கண்டு வியந்து பாராட்டி, பகிர்ந்து வருவதால் இன்ஸ்டாகிராமில் சில நாட்களாகவே இவர் தான் ஹிட்டான ட்ரெண்ட்.  சிலர் ‘நிறைமாத கர்ப்பிணியான ஆலிசானால் இவ்வளவு நளினமாக எப்படி நடனம் ஆட முடிகிறது’ என ஆச்சரியப்படும் வேளையில். சிலர், ‘இது மிகவும் ஆபத்தான முயற்சி. வயிற்றில் வளரும் சிசுவுக்கு இதனால் பாதிப்பு ஏற்படும்’ என்று தங்களது பயத்தையும், மற்ற கர்ப்பிணி பெண்கள் இதனை செய்து பார்க்கக் கூடாது என்ற அக்கறையையும் வெளிப்படுத்துகின்றனர்.


தனது வீடியோவை பகிர்ந்த ஆலிசான், ‘9 மாத கர்ப்பிணியான எனது உடலின் தோற்றம் முற்றிலுமாக மாறியுள்ளது. ஆனாலும் நான் மேற்கொள்ளும் ஃபிட்னஸ் பயிற்சிகளை நிறுத்தவில்லை. போல் நடனத்தைத் தினமும் உடற்பயிற்சிபோல செய்துவருகிறேன்’ என்று கூறியுள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close