இறப்புக்குப் பின் வாழத் தொடங்கிய ஓவியன்!

  அபிஜீ   | Last Modified : 30 Mar, 2018 12:53 pm

நம்மை மகிழ்விக்க ஒரு கோட்டோவியம் போதுமானது என்று சொன்னால் நம்புவீர்களா?

 உங்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருக்கலாம்; ஆனாலும், அவரை நான் ஒருவரை அறிமுகம் செய்யப்போகிறேன்.

தன் வாழ்நாள் முழுக்க ஓவியங்களை மட்டுமே நேசித்த ஒரு மகத்தான கலைஞர் அவர். 

1853 மார்ச் 30 ஆம் நாள் டச் நகரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த அந்த சிறுவன் அமைதியானவனாக, இயற்கையை நேசிக்கறவனாக பிறந்தான்.

தன் ஓவியங்களின் வாயிலாக மட்டுமே பேச நினைத்திருக்கிறான். மிக முக்கியமாக, அதை அடைய மட்டுமே தன் வாழ்நாள் முழுவதும் உழைத்து இருக்கிறான்.

சுமார் 2,100 ஓவியங்கள் வரைந்திருக்கிறான். அதில் 810 ஓவியங்கள் எண்ணெய் ஓவியங்கள்; மற்றவை யாவும் இயற்கை சார்ந்த வாழும் மனிதர்கள் சார்ந்த அவன் கண்ட காட்சிகளை லேண்ட் ஸ்கேப் போர்ட்டிராட் செல்ப் போர்ட்டிராட் என வரைந்து தள்ளி இருக்கிறான்.

பெரும்பாலான ஓவியங்கள் அவன் இறப்புக்கும் முன்னான இரண்டு வருடங்களில் வரையப்பட்டு உள்ளன. அவன் ஓவியத்தில் குறிப்பிடத்தக்கவை Sorrow (1882), The Potato Rates (1885), Sun flower (1887),Bed Room in Arles (1888), The starry Night(1889), Portrait of Dr.Ganchet (1890), Wheat field with crows (1890). 

தன் உடல் நிலைப் பற்றி பெரிதாய் கவலைப்பட்டதில்லை அவன். சரியாக சாப்பிடவில்லை என்றாலும் அளவுக்கதிகமாக குடித்துக் கொண்டிருந்தாலும் அவன் ஓவியம் வரைவதை நிறுத்தவில்லை.

அவன் மேற்கோள்கள் சில..

"I dream of painting and then I paint my Dream."

"I feel that there is nothing more truely artistic than to love people."

"A good picture is equivalent to good dead."

ஓவியத்தின் மீதான அவனது காதல் எல்லையற்றது என்பதற்கு இந்த வாக்கியங்களே சாட்சி.

அவன் இறக்கும் வரை விற்று தீர்ந்தது அவனது ஒரே ஒரு ஓவியம்தான் என்பது எத்தனை வருத்தத்திற்கு உரியது.

அவன் எப்படி இறந்தான் தெரியுமா..? ஒரு கலைஞன் எப்படி இறக்க வேண்டுமோ அப்படித்தான் இறந்தான் என்றும் வருத்தத்துடன் சொல்லலாம். ஆம், வறுமையும் மனச்சோர்வும் அவனை தற்கொலை செய்யத் தூண்டியது. 

அவன் இறப்பிற்கு பிறகுதான் அவன் மிகச்சிறந்த ஓவியனாக அறியப்பட்டான். 

அவன் இறப்புக்கு பிறகு அவனது ஓவியங்கள் அத்தனையும் விற்றுத் தீர்ந்தன. 

அவன் கடிதங்களை வைத்து அவனது வரலாறு தெரிந்தது.

அவனைச் சிறப்பு செய்யும் பொருட்டு 100 ஓவியர்கள் இணைந்து அவன் கதையை ஓவியமாகவே வரைந்து 2017-ல் ஒரு படமாக வெளியிட்டு சிறப்பு செய்தனர். 

அந்த படத்தின் பெயர்: 'Loving Vincent'.

ஆமாம், அந்த ஆகச் சிறந்த ஓவியன், உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கக் கூடிய வின்சென்ட் வான்கோ!

தனது 39 வயதில் தற்கொலை செய்துகொண்ட வான்கோ நட்சத்திரங்களைப் பக்கத்தில் பார்த்து வரைந்து கொண்டிருக்க ஆசைப்பட்டான். 

ஆம், அவன் வரைந்துகொண்டே இருப்பான் ஏனென்றால் ஓவியனுக்கு மரணமில்லை. 

மார்ச் 30... பிறந்தநாள் வாழ்த்துக்கள் வான்கோ!

- அபிஜீ

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close