கருப்பு ஆடைகள் அணிந்தால் காதல் கசக்காது- ஆய்வில் தகவல்

  Newstm Desk   | Last Modified : 28 Apr, 2018 02:52 am


கருப்பு நிறம் அபசகுணம். விசேஷ நாட்களில் அதை பயன்படுத்தக்கூடாது, கருப்பு நிற ஆடைகளை வாங்கவே கூடாது என்றெல்லாம் பெரியவர்கள் கூறுவதுண்டு, ஆனால் கருப்பு நிறம் காதலைகூட்டும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 

பிரிட்டன் பல்கலை கழகத்தைச் சேர்ந்த ராபின் காமுரே என்பவர் கருப்பு மற்றும் சிவப்பு என இரண்டு நிறங்களையும், நிறங்களுக்கும் காதல் உணர்வுகளின் வெளிபாட்டிற்கு இடையே உள்ள ஒற்றுமை பற்றியும் ஆய்வை மேற்கொண்டார். ஆய்வின்படி, சிவப்பு நிற ஆடையானது எதிர்பாலினத்திற்கு ஈர்ப்பை மட்டுமே ஏற்படுத்தும் ஆனால் கருப்பு ஆடையானது, விருப்பத்தை கூட்டும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது. 

சுமார் 546 இளைஞர்கள் மத்தியில் முதல் காதல் சந்திப்பினை குறித்து நடத்திய ஆய்வில், சிவப்பு நிறத்தால் ஏற்படும் ஈர்ப்பு சிறிது கலத்திலே மறைந்துவிடும் என்றும், கருமை நிறமே அதிக காலம் பிரியத்தை தக்கவைத்திருக்கும் என்றும் தெரியவந்துள்ளது. கலாச்சாரத்தின் படி, கருமை அபசகுணம் தான் ஆனால் காதலுக்கு அது பொருந்தாது என கூறப்படுகிறது. இந்த ஆய்விற்கு பிறகு இளைஞர்களிடம் ஆடை மட்டுமல்ல காலில் அணியும் காலணி முதல் மேக் அப் திங்க்ஸ், பேக் என அனைத்தும் கருப்பாய் மாறியுள்ளது என்றும் ராபின் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close