தொழில் துறையை திரும்பி பார்க்க வைத்த சாதனை பெண்கள்!

  Shalini C   | Last Modified : 08 Mar, 2018 12:18 pm

இல்லத்தரசிகள் என்ற ஒரு வார்த்தைகளுக்குள் இன்றைய பெண்களை அடக்க முடியாது. காரணம் கிடைக்கும் கேப்பில் எல்லாம் ‘சிக்ஸர்’ அடிப்பதில் அவர்கள் எப்போதோ வல்லவர்களாகிவிட்டனர். அப்படி இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்த 10 பெண் தொழில் முனைவோர்களைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம்...

இந்திரா நூயி: தமிழ் - அமெரிக்கா வம்சாவளியை சேர்ந்த இவர், மிகப்பெரிய உணவு மற்றும் குளிர்பான கம்பெனியான பெப்ஸிகோவின் சேர்மன் மற்றும் சி.எஃப்.ஒ. ’இந்தச் சமூகத்தில் எதையாவது சாதிக்க வேண்டும்’ எனும் பல பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்பவர். தனது அயராத உழைப்பால் மிகச் சில வருடங்களிலேயே பெப்ஸி நிறுவனத்தை 30 பில்லியன் லாபம் பெற வைத்தவர். இவரைப் பாராட்டி இந்திய அரசு ’பத்ம பூஷன்’ விருதைக் கொடுத்துள்ளது. சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐ.சி.சி க்கு வர சொல்லி அழைப்பு விடுத்திருந்ததையடுத்து, வரும் ஜூன் மாதம் டைரக்டராகப் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் மூலம் ஐ.சி.சி யின் முதன் பெண் டைரக்டர் என்ற பெருமையையும் இவரை வந்தடைய காத்துக் கொண்டிருக்கிறது.

இந்து ஜெயின்: கல்வியாளர், ஆன்மிகவாதி, கலாச்சார ஆர்வலர் என பல அடையாளங்களைக் கொண்டுள்ள இவருக்கு மிக முக்கியமான அடையாளம் தொழில் முனைவோர். ஆம்! டைம்ஸ் ஆஃப் இந்தியா குரூப்பின் சேர்மன் மற்றும் சி.இ.ஒ இவர்தான்! 2016 ஜனவரியில் இந்திய அரசின் ‘பத்ம பூஷன்’ விருதைப் பெற்றுள்ளார். 2003ல் இந்திய அரசு நிறுவிய ‘ஒன்ஸ் ஃபோரம்’ என்ற குழுவுக்கு வழிகாட்டியும் இவரே!

நைனா லால் கிட்வாய்: ஹெச்.எஸ்.பி.சி வங்கியின் ‘கன்ட்ரி ஹெட் ஆஃப் இந்தியா’ என்ற மிக பொறுப்புள்ள பெரிய பதிவிக்கு சொந்தக்காரர். 1982ல் ‘ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூலில்’ எம்.பி.ஏ படித்தவர். ஒரு வெளிநாட்டு வங்கியை வழி நடத்தும் முதல் இந்தியப் பெண்ணும் இவர் தான்! இவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் இவருக்கு ‘பத்ம ஸ்ரீ’ விருதைப் பெற்றுத் தந்துள்ளது. தவிர நம் நாட்டிலுள்ள பல பெண் தொழில் முனைவோர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்திருக்கிறார்.

கிரன் மஸூம்தர் ஷா: கர்நாடகாவைச் சேர்ந்த இவர் ’பயோகோன்’ ஃபார்மா நிறுவனத்தின் நிறுவனரும் நிர்வாக இயக்குநரும் ஆவார். அயர்லாந்தில் ‘பயோகோன் பயோகெமிக்கல்ஸ்’ நிறுவனத்தின் ட்ரைனீ மேனேஜராக பணிபுரிந்து பிஸினஸை முதாகக் கற்றுக் கொண்டு இந்தியா திரும்பிய கிரனுக்கு தானும் ஓர் சொந்தத் தொழிலைத் தொடங்கும் எண்ணம் மேலோங்குகிறது. இதற்காக லோன் கேட்டு பல வங்கிப் படிகளை ஏறி இறங்குகிறார். ஆனால் யாரும் இவருக்கு லோன் தர முன்வரவில்லை. கடைசியாக ஒரு சமூக நிகழ்ச்சியில் இவர் சந்தித்த வங்கி அதிகாரி இவருக்கு லோன் தருகிறார். ஆனால் இவர் தொடங்கிய புதிய நிறுவனத்தில் வேலை செய்ய யாரும் முன்வரவில்லை. சொன்னால் நம்ப் மாட்டீர்கள், இவரின் முதல் ஊழியர் ஒரு ஓய்வுப் பெற்ற கேரேஜ் மெக்கானிக். இப்படி பல சவால்களைக் கடந்து இன்று வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த இந்த குஜராத்திப் பெண்!

சிமோன் டாடா: நேவல் டாடாவின் இரண்டாவது மனைவி, ’காஸ்மெடிக்ஸ் ஸரீனா ஆஃப் இந்தியா’ என்ற டைட்டிலுக்குச் சொந்தக்காரர். ஆம் அழகு சாதனங்களை தயாரிக்கும் இந்திய நிறுவனமான ‘லாக்மீ’யின் சேர்மனாக இருந்தவர். அப்போது அவருக்கு ஃபேஷன் துறையில் ஆர்வம் ஏற்பட, டிரெண்ட் (வெஸ்ட் சைடு பிராண்ட் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும்) என்ற நிறுவனத்தை நிறுவி அதில் வெற்றியும் கண்டவர். சிறந்த நிர்வாகத்திற்காகவும், நல்ல வழிநத்துதலுக்காகவும் பல பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

பிரியா பவுல்: பொருளாதாரத்தில் சிறப்புப் பட்டம் பெற்ற இவர், குடும்பத் தொழிலான ஹோட்டல் பிஸினஸில் மார்க்கெட்டிங் மேனேஜராக கால் பதித்தார். தந்தையின் மறைவுக்குப் பின்னர், சிறப்பாக பிஸினஸை நிர்வகித்தார். ஆம்! பார்க் ஹோட்டலின் சேர்மன் இவர் தான். இடைவிடாது உழைப்பால், உலகின் தலை சிறந்த 101 ஹோட்டல்களுள் பார்க்கும் ஒன்று என 2003ல் நற்பெயரினைப் பெற்றார். தவிர சிறந்த விருந்தோம்பலுக்காக இந்திய அரசின் ‘பத்ம ஸ்ரீ’ அவார்டினையும் பெற்றுள்ளார்.

ஏக்தா கபூர்: இளம் வயதிலேயே நிகழ்ச்சி தயாரிப்புத் துறையில் வெற்றி கண்டவர். நம் குடும்பங்களை ஆக்கிரமித்திருக்கும் சீரியல்களின் முன்னோடி இவர் தான்! குறிப்பாக தமிழ்நாட்டையே தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த ‘நாகினி’யும் இவர் தயாரித்ததே. தற்போது கூட இதன் மூன்றாம் பாக தயாரிப்பில் ஈடுப்பட்டிருக்கிறார். 1995ல் சீரியல்களை தயாரிக்க ஆரம்பித்த ஏக்தா, 2001லிருந்து படம் தயாரிக்கவும் ஆரம்பித்தார். குறிப்பாக விஸ்வரூபம் - 2 வும் இவருடைய தயாரிப்பில் ரெடியாகிக் கொண்டிருக்கிறது.

சுலஜா ஃபிரோடியா மோத்வானி: கைனடிக் மோட்டார்ஸின் ஜாயிண்ட் மேனேஜிங் டைரக்டர், கைனடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யூசனின் சி.இ.ஒ என இடைவிடாது இயங்கிக் கொண்டிருப்பவர். மொபட் கம்பெனியிலிருந்து மொத்த தாயாரிப்பு நிறுவனமாக கைனடிக் நிறுவனத்தை மாற்றியது இவரே! அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் உத்திகளை வடிவமைத்தவ்ரும் இவர் தான். ’த ஃபேஸ் ஆஃப் த மில்லினியம்’ என்று இந்தியா டுடேவும், ’த குளோபல் லீடர் ஆஃப் டுமாரோ’ என வோர்ல்ட் எக்னாமிக் ஃபோரமும் இவருக்குப் பட்டமளித்துள்ளன.

மல்லிகா ஸ்ரீநிவாசன்: திருநெல்வேலியைச் சேர்ந்த இவர் TAFE (Tractors And Farm Equipment Limited) நிறுவனத்தின் சேர்மன் மற்றும் சி.இ.ஒ வாக பதவி வகிக்கிறார். 1986ல் 85 கோடி டர்ன் ஓவராக இருந்த இந்தக் கம்பெனியை 20 ஆண்டுகளில் 2900 கோடியாக பன் மடங்கு உயர்த்தி நம்மை வியக்க வைக்கிறார்! பாரதிதாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் உள்ளிட்ட பல பிஸினஸ் ஸ்கூல்களின் போர்டு மெம்பராகவும், டாடா குளோபல் பீவரேஜஸ், டாடா ஸ்டீல் ஆகியவற்றின் போர்டு மெம்பராகவும் செயல்பட்டு வருகிறார்.

நீலம் தவான்: ஏசியன் பெயிண்ட்ஸ் மற்றும் இந்துஸ்தான் லீவர் லிட்டேட்டில் வேலைக்குச் சேர ஏங்கியவரை, ஒரு பெண்ணை எங்களது சேல்ஸ் & மார்க்கெட்டிங் குழுவில் இணைத்துக் கொள்ள முடியாது எனக்கூறி அந்நிறுவனங்கள் இவரை நிராகரித்தன. தற்போது மைக்ரோசாஃப்ட் இந்தியாவின் மொத்த சேல்ஸ் & மார்க்கெட்டிங் டீமையும் இயக்குகிறார்! தவிர ஐ.பி.எம், ஹெச்.பி, ஹெச்.சி.எல் நிறுவனங்களிலும் முக்கிய பங்கு வகித்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.