ராஜா ராம் மோகன் ராய்யை சிறப்பிக்கும் கூகுள் டூடுல்

  Newstm Desk   | Last Modified : 22 May, 2018 05:36 pm

இந்திய மறுமலர்ச்சி தந்தை ராஜா ராம் மோகன் ராய்யின் 246வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் இன்றைய கூகுள் டூடுள் அமைந்துள்ளது. 

இந்தியாவில் சீர்த்திருங்கள் கொண்டு வருவதில் முன்னொடியாக திகழ்ந்த ராஜ ராம் மோகன் ராய் மே 22ந்தேதி 1772ம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பிறந்தார். 

அரசியல், பொது நிர்வாகம், கல்வி மற்றும் மதம் சார்ந்த துறைகளில் கைதேர்ந்த ராஜாராம், அராபிக், சமஸ்கிருதம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, இலத்தீன், கிரேக்கம் மற்றும் ஹீப்ரு மொழிகளையும் நன்கு அறிந்தவர். 

1805ம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய நிறுவனத்தில் பணியில் சேர்ந்து 1814ம் ஆண்டு வரை பணியாற்றினார். பின்னர் 1815ம் ஆண்டு ஆத்மீக சபாவைத் தோற்றுவித்தார். இதுவே 1828ல் முதல் பிரம்ம சமாஜமாக வளர்ந்தது. ஒரே கடவுள் என்பதில் நம்பிக்கை கொண்டவர்களின் சபையாக இது விளங்கியது. 

பலதார மணம் மற்றும் குழந்தை திருமணத்திற்கும் எதிராக போராடினார். விதவைகள் மறுமணம், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், கலப்பு திருமணம் ஆகியவற்றை ஆதரித்த ராஜாராம், சமுதாய மலர்ச்சி என்பதனை கல்வியால் மட்டுமே சாதிக்க முடியும் என்று அவர் உறுதியாக நம்பினார். 

1829ம் ஆண்டு அயராது உழைத்து கணவன் மரணத்திற்கு பிறகு உடன்கட்டை ஏறும் 'சதி'யை ஒழித்தார்.

1831 இல் முகலாய அரசருக்கான ஊக்கத்தொகையை ஆங்கிலேய அரசு ஏற்றித்தர இங்கிலாந்துக்கு பயணம் சென்ற அவர் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நேரில் பார்த்தார். சட்டம் மற்றும் பொருளாதாரம் சார்ந்து நூல்களை அங்கே இருந்து இயற்றினார். பிரிஸ்டோல் நகரத்தில் தங்கியிருந்த போது மரணமடைந்தார். 

இந்திய மறுமலர்ச்சி தந்தை என அழைக்கப்படுபவர். இவரை கொண்டாடும் வகையில் இன்று கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுல் ஒன்றை பதிவிட்டுள்ளது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.