குத்து சண்டை நாயகன் மைக் டைசன்

  சுஜாதா   | Last Modified : 30 Jun, 2018 08:53 am

mike-tyson-birthday-special

மைக்கேல் ஜெரார்டு "மைக்" டைசன் (Mike Tyson)  உலகப் புகழ்பெற்ற அமெரிக்க குத்துச்சண்டை வீரரும், ஹெவிவெய்ட் சாம்பியனுமான இவரை பற்றி சில சுவாரசிய தகவல்கள்: 

l அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ப்ரூக்ளினில் ஜூன் 30 ம் தேதி  1966 ஆம் ஆண்டு மைக் டைசன் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் ரோட்நே மற்றும் சகோதரி டேனிசே. இவர்களை தந்தை கைவிட்டதால் தாய்  லோர்ன் ஸ்மித் வேலை செய்து காப்பாற்றினார். இவரது 16 வயதில் தாய் இறந்தார். பாக்ஸிங் மேலாளரும் பயிற்சியாளருமான கஸ்டி அமாடோ இவரது சட்டப்பூர்வ பாதுகாவலராக மாறினார்.

l குழந்தைப் பருவம் முழுவதிலும் பல்வேறு குற்ற செயல்களை செய்து, தனது 13 வயதுக்குள் 38 முறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் இருந்த இவருக்கு அப்பள்ளியில் ஆலோசகராக இருந்த குத்துச்சண்டை வீரர் பாபி ஸ்டூவர்ட், இவரது குத்துச்சண்டை திறனை அறிந்து பயிற்சி அளித்தார்.

l 1982 ஆம் ஆண்டு மைக் டைசன் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார். மார்ச் 6, 1985 அன்று, நியூயார்க்கின் அல்பானியில் மைக் டைசன் தனது தொழில்முறை விளையாட்டு அறிமுகத்தை ஏற்படுத்தினார். 

தொடர்ச்சியாக குத்துச்சண்டை போட்டிகளில் கலந்துகொண்ட மைக் டைசன்  ஒரே ஆண்டில் 15 போட்டிகளில் விளையாடினார். தனது முதல் 28 போட்டிகளில் KO/TKO மூலமாக 26 இல்  வென்றார். இவரது தொடர் வெற்றிகள் ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்தது. தலைசிறந்த ஹெவிவெய்ட் சாம்பியனாகவும் மிளிர்ந்தார்.

l  1986-ல் உலக ஹெவிவெய்ட் சாம்பியன் பட்டம் வென்று ‘உலகின் இளம் சாம்பியன்’ என்ற பெருமையைப் பெற்றார்.

l ஒரே நேரத்தில் உலக பாக்ஸிங் அசோசியேஷன்(WBA), உலக பாக்ஸிங் கவுன்சில்(WBC), உலக பாக்ஸிங் பெடரேஷன்(IBF) என 3 அமைப்புகளின் பட்டங்களை தக்கவைத்திருந்த முதல் ஹெவிவெயிட் சாம்பியனாக இருந்தார். 

"இளம் வெடி", "இரும்பு மைக்" மற்றும் "உலகின் கெட்ட மனிதன்" என்ற புனைப்பெயர்களைக் கொண்டிருந்தார்.

| மைக் டைசன் தனது முதல் 19 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளை மயங்க வைக்கும் அடியாலும், 12 போட்டிகளை முதல் சுற்றிலும் வென்றார். 

l 1992 ல் சிறை சென்றவர், இஸ்லாம் மதத்துக்கு மாறினார். 1995-ல் விடுதலையான பிறகு மீண்டும் குத்துச் சண்டைப் போட்டிகளில் கலந்துகொண்டார். பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர் தோல்விக்குப் பிறகு 2006 ல் குத்துச்சண்டை போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

l பத்து ஆண்டுகாலம் புகழின் உச்சியில் இருந்து சாதனை வீரராகத் திகழ்ந்தார். திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வீடியோ கேம்களில் தோன்றியுள்ளார். ‘அண்டிஸ்பியூட்டட் ட்ரூத்’ என்ற நூலை 2013-ல் வெளியிட்டார். தற்போது திரைப்படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.