நாட்டு கோழி முட்டை ஏன் கடைகளில் எளிதில் கிடைப்பதில்லை? 

  சுஜாதா   | Last Modified : 30 Jun, 2018 09:17 am
country-chicken-eggs

மளிகைக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை எங்கு பார்த்தாலும் பிராய்லர் கோழி முட்டைகள் தான் அதிக விற்பனையில் உள்ளது. ஆனால்  நாட்டுக் கோழி முட்டைகளை அப்படி விற்பனை செய்ய முடியவில்லை அது என்று பார்ப்போமா?

இன்றைய பாஸ்ட் லைப் வியாபார உலகில் எல்லாமே உடனுக்குடன் கிடைக்க வேண்டும். இதை தான் மக்களும் விரும்புகிறார்கள் என்பதை உணர்ந்த வியாபாரிகள் கோழிகளையும் விட்டு வைப்பதில்லை.  ப்ராய்லர் கோழி குஞ்சு முதல் முட்டையிடும் வரை அனைத்தும் ஊசியின் மூலமே நடைபெறுகிறது. ஏன் ஊசி என்று தோன்றுகிறதா?  ஏழு மாதத்தில் வளரக்கூடிய கோழியை இரண்டே மாதத்தில் அதாவது 45 நாளில் வளர்ச்சி பெற இந்த ஊசி போடப்படுகிறது இதனால்  பிராய்லர் கோழிகளில் இருந்து வரும் முட்டைகளும் செயல்திறன் அற்றவை ஆகிறது. (அந்த பிராய்லர் முட்டைகளை நாம் அடை வைத்தாலும் குஞ்சு பொறிக்காது).

நாட்டுக் கோழி முட்டைகளை முட்டையிட்டு மூன்று அல்லது நான்கு நாள் மேல் அறை வெப்ப நிலையில் வைத்திருந்தால் கூட அது கரு கூட ஆரம்பித்து விடும். நாட்டுக் கோழிகள் 15 முதல் 20 வரை முட்டை இடும் தன்மையுடையது இதில் இருபதாவது முட்டையிடும்போது முதலில் இட்ட 10 முட்டைகள் தானாகவே கரு கூட ஆரம்பித்துவிடும் இப்படி உள்ள பொழுது இதனை எப்படி வைத்து வியாபாரம் செய்யமுடியும்..? 

ஒரு சில வியாபாரிகள் பிராய்லர் கோழி முட்டைகளை நாட்டு கோழி முட்டை என்று ஏமாற்றி விற்பனை செய்கின்றனர்.ஏமாறாதீர்கள்!   

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close