90 கோடி மதிப்புள்ள 89 கேரட் மஞ்சள் வைரம் கண்டுபிடிப்பு!

  திஷா   | Last Modified : 03 Jul, 2018 01:49 am
89-carat-yellow-diamond-worth-rs-90-crores-found-in-africa

ஆப்பிரிக்காவில் உள்ள லோகோஸில் மோதே வைர சுரங்கத்திலிருந்து 89 காரட் மஞ்சள் வைரம் வெட்டியெடுக்கப்பட்டுள்ளது. 

இது பற்றி வைர வியாபாரி  ஸ்டீஃபன் வெதரால்  சன் பத்திரிகைக்குக் கொடுத்த பேட்டியில், 'இதற்கு முன்னர் 25 காரட் அளவிலான மஞ்சள் வைரமே கிடைத்திருந்தது, ஆனால் தற்போது தான் 89 கேரட் அளவிலான மஞ்சள் வைரம் கிடைத்துள்ளது' எனத் தெரிவித்திருக்கிறார். இந்த வைரத்தின் காப்புரிமையில் 70 சதவீதம் லுகாபாவிற்கும், எஞ்சிய பகுதி லெசோதா அரசிற்கு சொந்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பிரமாண்ட மஞ்சள் வைரத்தின் மதிப்பு 10 மில்லியன்பவுண்ட் ஸ்டெர்லிங். அதாவது இந்திய மதிப்பில் ரூ. 90,31,62,562. 

தென் ஆப்பிரிக்கா வைரத்திற்கு பிரபலமான நாடாகும். கடந்த காலங்களில் அங்கு மதிப்பளவிட முடியாத அளவில் பல வைரங்கள் கிடைத்திருக்கின்றன. 1905-ல் சர் தாமஸ் என்பவர் மிகப் பெரிய கடினம் வாய்ந்த வைரத்தைக் கண்டெடுத்தார். அது மொத்தம் 3106 கேரட் என்பது கூடுதல் செய்தி. 

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close