வெள்ளி பொருட்களை எப்படி பராமரிப்பது?

  திஷா   | Last Modified : 19 Jul, 2018 11:29 pm
how-to-maintain-your-silver-jewellery

தற்போது வெள்ளி அணிகலன்களை விரும்பி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மார்டன் மற்றும் எத்னிக் என அனைத்து உடைகளுக்கும் வெள்ளி பொருந்திப் போவதும் அதற்கு முக்கியக் காரணம். ஆனால் பலர் அதை பராமரிப்பதில்லை. சில வெள்ளி பொருட்கள் உடனே கறுத்து விடும். உண்மையிலேயே கறுத்துப் போகும் வெள்ளி தான் சுத்தமானது. இதோ வெள்ளியை பராமரிக்க ஈஸியான வழிகள். 

1. நீங்கள் வெள்ளி நகைகளை வழக்கமாக அணிந்தால், அது கறுப்படையும். உபயோக படுத்தியதும்  காற்று புகாத பெட்டியில் அடைத்து வைக்க வேண்டும். சூரிய ஒளி இல்லாத, ஈரப்பதம் இல்லாத குளிர்ந்த இடத்தில் வைப்பது நல்லது. அந்த டப்பாவில் சுண்ணாம்பு அல்லது சிலிக்கா பாக்கெட்டை போட்டு வையுங்கள். இது ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். 

2. பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட்டாக்கி, பல் துலக்கும் ப்ரஷ்ஷால் வெள்ளி பொருட்களை சுத்தம் செய்தால் கறுமை நீங்கி பளபளப்பாகும். அதிகமாக கறுத்துவிட்டால், அரை கப் வினிகரில் 2 டீ ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து, அதில் வெள்ளி பொருட்களை  2-3 மணி நேரம் ஊற வைத்து, ப்ரஷ்ஷால் தேய்த்துக் கழுவி காய வைத்தால் பளிச்சென்று ஆகும். 

3.வெள்ளி நகைகளை குளிக்கும்போது கழற்றி வைத்துவிடுங்கள். வீட்டு வேலைகளை செய்யும் போதும் மேக்கப் போடும் போதும் வெள்ளி அணிகலனை தவிர்த்தால் ரொம்ப நாட்களுக்கு புதிது போலவே இருக்கும்.  

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close