குதிரை சிலைகளும் அதன் அர்த்தங்களும்

  சுஜாதா   | Last Modified : 21 Jul, 2018 09:21 am

horse-and-soldier-statue-meanings

நாம் சாலைகளில் செல்லும் போது பெரும்பாலான இடங்களில் குதிரை சிலைகளையும் அதன் அருகில் மன்னர்களின் சிலைகளையும் பார்த்திருப்போம். ஒரு சில மன்னர்கள் குதிரை சிலையின் மேல் அமர்ந்த படியும், சிலர் அதன் அருகில் நின்றபடியும், சில சிலைகளில் குதிரையின் முன்னங்கால்கள் இரண்டும் தூக்கியபடியும் இருக்கும். இப்படி செதுக்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிலைக்கும் ஒரு அர்த்தம் உண்டு. அவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...         

இரண்டு கால்களையும் தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் ஒரு போர் வீரனாக களத்தில இறந்திருக்கிறார் என்பதை குறிக்கிறது.

ஒற்றைக் காலை தூக்கிய படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்.. இந்த மன்னர் இயற்கை மரணமடையவில்லை என்பதை குறிக்கிறது. சிலவேளை அந்த மன்னர் விழுப் புண் அடைந்து இறந்திருந்தால் கூட இப்படித் தான் கருதப்படும்.

நான்கு கால்களையும் தரையில் பதித்த படி நிற்கும் சிலைகளைப் பார்த்தால்... அந்த மன்னர் இயற்கை மரணமெய்து விட்டார் என்பதைக் குறிக்கும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close