பைக் தீம் கஃபே : சென்னையில் முதல் முறை

  கனிமொழி   | Last Modified : 27 Jul, 2018 03:46 am
chennai-s-first-bikers-cafe

இந்த கால இளைஞர்களுக்கு பைக் மீது அதிக பைத்தியம் என்று சொல்லலாம். கல்லூரி சேர்ந்தவுடன் ஒரு சூப்பர் பைக்கை வாங்கிட வேண்டும் என்பதே பலரின் லட்சியமாக கூட இருக்கிறது. பொண்ணுங்களும் சரி பசங்களும் விதவிதமான பைக்கில் நீண்ட பயணம் செல்ல விரும்புவர். வித்தியாசமான பைக் வாங்குவதே ஃபேஷனாக மாறிவிட்டது.

சென்னையில் முதல் முறையாக பைக் பிரியர்களுக்காகவே 'பைக்ஸ் அண்ட் பர்க்கர்ஸ்' என்ற கஃபே சமீபத்தில் சென்னை கொளத்தூரில் ஆரம்பிக்க பட்டுள்ளது. இந்த கஃபே உள்கட்டமைப்பு பைக் பிரியர்களுக்கு பிடித்த வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. பைக்ஸ், ஹெல்மெட்கள், கியர், மற்றும் பைக்கின் மற்ற பாகங்கள் என்று கஃபே சுற்றிலும் இது போன்ற பொருட்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது.

பொதுவாக நாம் சாப்பிட ஒரு உணவகத்திற்கு செல்லும் போது வாசலில் நிறுத்திய பைக்கை பற்றி யோசித்து கொண்டே இருக்கும் பழக்கம் இங்கு பலருக்கும் உண்டு. புதுசா வாங்கின ஹெல்மெட் யாராவது தூக்கிட்டு போய்டுவாங்களோ, பைக் கண்ணாடி ஒடஞ்சிருமோ, இல்லை புது பைக்கை யாராவது கீழே தள்ளிவிடுவார்களோ என்ற கேள்விகளோடு சாப்பிட உணவகத்திற்கு போகும் இளைஞர்கள் தான் அதிகம். ஆனால் இந்த கஃபேவில் நீங்கள் சாப்பிடும் போது உங்கள் பைக்கையும் கஃபேவிற்குள் கொண்டு சென்று பக்கத்திலேயே வைத்து கொள்ளலாம்.

அதுமட்டும் இல்லாமல் வெறும் 45 நிமிடங்களில் நீங்கள் உணவு சாப்பிட்டு முடிப்பதற்குள் உங்கள் பைக்கை சர்விஸ் செய்து தரும் சலுகையும் இங்கு கிடைக்கும். என்னதான் புது புது உணவுகள் வந்தாலும் பீட்ஸா மீது இருக்கும் காதல் இளைஞர்களுக்கு என்றும் குறையாத ஒன்று. பீட்ஸா, பர்கர், ஐஸ் கிரீம் போன்ற மேற்கு நாடு உணவுகளே இங்கு கிடைக்குமாம். சென்னையிலேயே மிக பெரிய அளவு பர்கர் தான் இந்த கஃபேவின் பிரபலமான விஷயம்.

இந்த ராட்ச்சஸ பர்கர் 8 அங்குல விட்டம் அளவில் இருக்கும். இந்த பர்கரை ஒரே நபர் தனியாக சாப்பிடுவது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான், அதுவே நீங்கள் சிக்கன் பிரியராக இருந்தால் இந்த சிக்கன் பர்கரை சாப்பிடாமல் இருக்கமாட்டீர். இது போல வித்தியாசமான தீம் உணவகங்கள் சென்னையில் அதிகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close