25 ஆண்டுகளாக இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழும் மனிதர்!! எங்கே தெரியுமா?    

  சுஜாதா   | Last Modified : 28 Jul, 2018 09:33 am
man-eats-leaves-fresh-wood-for-25-years-has-never-fallen-ill

25 வருடங்களாக பச்சை இலைகளையும், மர கிளைகளையும் உண்பதை பழக்கமாக கொண்ட அபூர்வ மனிதர் ஒருவரை பாகிஸ்தானில் இனம்கண்டுள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் குஜ்ரன்வாலா மாவட்டத்தில் வசித்துவரும் 50 வயதான மெக்மூத் பட் என்பவர் கடந்த 25 வருடங்களாக உணவு வகைகளை சாப்பிடுவதில் ஆர்வமின்றி, மரங்கள் மற்றும் இலை தழைகளை சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  மேலும் தனது சிறுவயதில் ஏற்பட்ட குடும்ப வறுமை காரணமாக, தனது பசியை தணிப்பதற்காக பச்சிலைகள் மற்றும் மரக்கிளைகளை உண்டு வந்த நிலையில், நாளடைவில் அவையே அடிப்படை உணவாக பழகிவிட்டதனால் தனக்கு வேறு உணவுகள் மீது நாட்டமில்லை என மெகமூத் பட் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தற்போது தினமும் 1200 ரூபாய் வரை சம்பாதிக்கும் இவர் சமைத்த உணவுகள் மீது நாட்டமின்றி பனியன், தலி மற்றும் சக் சங்கிலி போன்ற மரங்களை உண்டு வாழ்வதும், எந்தவொரு நோய் காரணமாக டாக்டரிடம் போனதில்லை என்று அவரை தெரிந்தவர்கள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close