மழைக்காலத்தில் பாதங்கள் பத்திரம்...

  திஷா   | Last Modified : 11 Aug, 2018 11:29 pm
how-to-take-care-of-feet-in-monsoon

மழைக்காலம் தொடங்கி விட்டது. அழகைப் பொறுத்த வரையில் வெயிலில் முகத்தைப் பாதுகாப்பது போல மழையில் பாதங்களுக்கு உகந்த முக்கியத்துவத்தைத் தர வேண்டும். காலில் அதிகமாக இந்த நேரத்தில் ஈரப்பதம் இருக்கும். வறட்சியைப் போல் அளவுக்கதிகமான ஈரப்பதமும் தோலுக்கு ஏற்றதல்ல. இதனால் எளிதாக பூஞ்சைத் தொற்று ஏற்படும். அதனால் போதுமான பராமரிப்பு இந்த நேரத்தில் அவசியம். வீட்டிலேயே செய்வதற்கான சில டிப்ஸ்களை இங்கே தருகிறோம். 

ஸ்கிரப்
ஸ்கிரப்பர் அல்லது ப்யூமிக் ஸ்டோனால் பாதத்தை நன்கு ஸ்கிரப் செய்யவும். இதனால் இறந்த செல்கள் நீக்கப் படும். இறந்த செல்கள் பாதத்தில் இருந்தால் பாதங்கள் கடினமாகவும் வெடிப்பாகவும் இருக்கும். 

ஈரப்பதம்
படுக்கைக்கு செல்லும் முன் பாதங்களுக்கு ஆலிவ் அல்லது பாதாம் ஆயிலை அப்ளை செய்யுங்கள். இவைகள் ஒரு இயற்கையான லோஷன். 

காலணிகளை காய வையுங்கள் 
உங்கள் செருப்புகளை சூரிய ஒளியில் காய வையுங்கள். மழை காலத்தில் கண்டிப்பாக இவற்றை நிழலில் உலர்த்தக் கூடாது. ஏனென்றால் பூஞ்சை மற்றும் பாக்டீரியாக்கள் நிழலில் தான் வளரும். 

பாதங்களுக்கு 
வெளியில் இருந்து வந்ததும் சோப்பைப் பயன்படுத்தி கால்களை நன்கு கழுவுங்கள். 
மழை நேரத்தில் திறந்தவாறு இருக்கும்படியான செருப்புகளைப் பயன்படுத்துங்கள். 
நக இடுக்குகளில் பூஞ்சை தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அவற்றை வெட்டி விடவும்.  
வெது வெதுப்பான நீரில் 10 நிமிடம் பாதங்களை ஊற வைத்து கழுவவும். 
எப்போதும் உலர்ந்த செருப்புகளை அணியுங்கள். 

மேற்கூறியவற்றை பின்பற்றினால், மழைக்காலத்தில் உங்கள் பாதங்களை பாதுகாக்கலாம். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close