உலக யானைகள் தினம்!

  திஷா   | Last Modified : 12 Aug, 2018 05:25 pm

world-elephant-day

பயம் சந்தோஷம் இரண்டையும் தரும் விலங்கு என்றால் அது யானை தான். யானையைப் பிடிக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. எவ்வளவு பிரச்னையில் இருந்தாலும், யானைப் பார்த்ததும் மனது லேசாகி, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும். நாய், பூனையைப் போல் யானையும் வீட்டு விலங்காக இருந்தால், பலரின் வீட்டில் செல்லப் பிராணியாக வளர்ந்திருக்கும். அதே நேரத்தில் தனியாக மாட்டிக் கொண்டால் நிலைமை தலை கீழ் தான். பலத்திற்கு உதாரணமாகவும் யானையைத் தான் சொல்வோம். இன்று உலக யானைகள் தினம். 

யானைகளை மையப் படுத்தி Return to the Forest (வனத்திற்குள் திரும்பு) என்ற ஆங்கிலப் படத்தை வில்லியம் சாட்னர் என்பவர் எடுத்தார். இந்தப் படம் 2012, ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியானது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அந்த நாள் உலக யானைகள் தினமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. உலகிலுள்ள 65 அமைப்புகள் மற்றும் யானைகளைக் கொண்ட நாடுகள் இந்த தினத்தை கொண்டாடுகின்றன. யானைகளைப் பாதுகாப்பதே இந்த நாளைக் கடைப் பிடிப்பதன் நோக்கம். 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.