காதலித்தால் உடல் எடை அதிகரிக்குமாம் - காரணம் உள்ளே!

  திஷா   | Last Modified : 14 Aug, 2018 07:31 am

love-may-make-you-gain-weight

எவ்வளவு சாப்பிட்டாலும், என்ன சாப்பிட்டாலும் வெயிட் போடக் கூடாது என்பது தான் இன்றைய இளம் தலைமுறையின் தலையாய பிரச்னையாக உள்ளது. உடல் எடை என்பது உணவுப் பழக்கங்களால் மட்டும் கூடுவதில்லை. இதில் ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் தற்போதைய ஆராய்ச்சியில் ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிய வந்திருக்கிறது. அதாவது காதல் வயப்பட்டவர்களுக்கும், ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுக்கும் உடல் எடை 'சர்ரென' ஏறுமாம். 

ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லேண்ட் பல்கலைக் கழகத்தினர் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர். 15000 பேரை வைத்து, ஏறக்குறைய பத்தாண்டுகள் இந்த ஆய்வை, அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதில் பங்கெடுத்த ஆண்கள் மற்றும் பெண்களின் பி.எம்.ஐ காதலுக்கு முன்பும் பின்பும் ஒப்பிட்டுப் பார்த்து இந்த முடிவு அறிவிக்கப் பட்டுள்ளது. அதோடு காதலில் விழாத சிங்கிள்ஸ், சரியான மற்றும் தவறான உணவுப் பழக்கம் கொண்ட ஜோடிகள் என அனைத்துத் தரப்பு மக்களையும் இந்த ஆய்வு 'கவர்' செய்திருந்தது. 

எப்படி காதலில் விழுபவர்களின் எடை அதிகரிக்கிறது என்ற சந்தேகத்திற்கு, "காதலில் விழுந்தவுடன் எதிர் தரப்பை இம்ப்ரெஸ் செய்ய வேண்டுமென ஆணும், பெண்ணும் விரும்புகிறார்கள். அதற்காக நிறையவும் மெனக்கெடுகிறார்கள். ஆனால் ஒரு போதும் அவர்கள் திருப்தியடைவதில்லை. இன்னும் பெஸ்டாக, இன்னும் பெஸ்டாக என அவர்களின் முயற்சி தொடர்கிறது. காலப்போக்கில் இது ஒருவித பிரஷ்ஷரை அவரகளுக்குக் கொடுக்கிறது. இதனால் அவர்களுக்குத் தெரியாமலேயே உடல் எடை கூடுகிறது. 

காதலில் விழுந்ததும் உடல் உழைப்பை குறைத்து, அமர்ந்து பேசுவதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள். காதலில் இருக்கும் போது 'ஹேப்பி ஹார்மோன்ஸ்' என அழைக்கப் படும் ஆக்ஸிடோசின், டோபமைன் நம் உடல் முழுவதும் சுரக்கிறது. ஆனால் இந்த ஹார்மோன்கள் சாக்லெட் மற்றும் ஹை-கலோரி உணவுகளை அதிகம் எதிர்ப்பார்க்கும், இதனால் தான் காதலர்கள் சாக்லெட்டுகளை அதிகம் பகிர்ந்துக் கொள்கிறார்கள்" என ஆய்வாளர் ஒருவர் விளக்கமளித்தார். 

நம்ம ஊரில் கல்யாணம் முடிவானதும் வெயிட் போடுவதை சந்தோஷத்தால் கூடிய எடை என்பார்கள். ஆனால் இதன் உண்மையான காரணம் வருங்கால வாழ்க்கைத் துணையை இம்ப்ரெஸ் செய்வதற்காக ஏற்படும் பிரஷ்ஷர் தான் என்பது இப்போது தெளிவாகிறது. 

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.