அன்பின் அடையாளமான ராக்கி - எப்படி தெரியுமா?

  திஷா   | Last Modified : 25 Aug, 2018 06:37 pm
raksha-bandhan-all-you-wanted-to-know

சகோதரத்துவத்தின் அன்பின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் வட இந்தியர்களால் கொண்டாடப்படுவது ரக்‌ஷா பந்தன். அந்தாளில் பெண்கள் தங்களது சகோதரர்களுக்கு ராக்கி எனப்படும் கயிறை கையில் கட்டுவது வழக்கம். அதை கட்டும் தங்கைக்கும், கட்டிக் கொள்ளும் அண்ணனுக்கும் அன்பு பெருக்கெடுக்கும்.  

எதனால் இந்த ரக்‌ஷா பந்தன் கொண்டாடுகிறார்கள் தெரியுமா? 

மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனைவியான திரௌபதி, போர்க்களத்தில் கிருஷ்ணருக்கு ஏற்பட்ட காயத்தால் வடியும் ரத்தத்தைக் கட்டுப்படுத்த, அவரது புடவையின் ஒரு பகுதியைக் கிழித்து, காயம் பட்டிருக்கும் மணிக்கட்டில் கட்டினார். இந்நிகழ்வு, கிருஷ்ணரின் ஆழ்மனதைத் தொட்டதால், அவர் திரௌபதியைத் தனது சகோதரியாக ஏற்றுக்கொண்டு அவரை எல்லா தீய சக்திகளிடமிருந்தும், பிரச்னைகளிலிருந்தும் பாதுகாப்பதாக அவருக்கு உறுதியளித்தார்.

அவரளித்த உறுதியைக் காப்பாற்றும் விதமாக, சூதாட்டத்தில் கௌரவர்களிடம் பாண்டவர்கள் தோற்று துரதராஷ்டிராவின் நீதிமன்றத்தில் திரௌபதியை துகிலுரிய முயன்றபோது, இழுக்க இழுக்க முடியாத சேலையாக மாற்றி திரெளபதியின் மானத்தைக் காப்பாற்றினார் கிருஷ்ணர். இந்த நிகழ்வே இன்று ரக்ஷாபந்தன் விழாவாக கொண்டாடப் படுகிறது.

ராக்கியைப் பெற்றுக் கொண்ட அண்ணன், எப்போதும் தங்கைக்கு பாதுகாப்பாக இருந்து அவளை பிரச்னைகளிலிருந்து காக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம். அதனால் யார் ஒருவர் உங்களுக்கு ராக்கி கட்டினாலும், அவர்களை எப்போதும் அன்பாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால், எல்லோருக்கும் உங்கள் மேல் அந்த உணர்வு வராது!

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close