• கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் தொடர்வார்: பா.ஜ தலைவர் அமித் ஷா
  • எம்.எல்.ஏ கொலையை தொடர்ந்து காவல் நிலையத்திற்கு தீ வைத்தனர் ஆதரவாளர்கள்
  • கேரள கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி பணி நீக்கம்
  • வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க அதிபர் ட்ரம்ப் தயார்: வெளியுறவுத்துறை செயலாளர்
  • நாகப்பட்டினம் அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது பெண் குழந்தை பத்திரமாக மீட்பு

மு.கருணாநிதியின் தந்தைக்கும் -டி.என்.ஆர் க்கும் உள்ள தொடர்பு..!!

  சுஜாதா   | Last Modified : 27 Aug, 2018 08:58 am

t-n-rajarathinam-pillai

திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை என்று பரவலாக அறியப்பட்ட டி. என். ராஜரத்தினம் பிள்ளை (1898-1956) ஒரு நாதசுரக் கலைஞர் ஆவார். நாதசுரச் சக்கரவர்த்தி எனப் பலரும் குறிப்பிடும் அளவுக்கு மிகுந்த புகழுடன் விளங்கிய இவர் சில தமிழ்த் திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருமருகல் என்ற ஊரில் 1898 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ம் நாள் பிறந்த ராஜரத்தினம் பிள்ளையின்  இயற் பெயர், பாலசுப்பிர மணியம். இவர் பிறந்த சில நாட்களி லேயே தந்தை இறந்ததால், தாய், குழந்தையுடன் நாகஸ்வர கலைஞரும், தன் சகோதரருமான நடேசப்பிள்ளையின் வீட்டுக்குச் சென்றுவிட்டார். 

அவருக்கு குழந்தை இல்லை என்பதால் இந்தக் குழந்தையையே தத்து எடுத்துக்கொண்டார். ‘ராஜரத்தினம்’ என்ற புதிய பெயரைச் சூட்டி வளர்த்தார்.  திருமருகல் நடேசபிள்ளை நாதசுவரக்காரருக்கு வளர்ப்புப் பிள்ளையாகி திருமருகல் நடேசபிள்ளை மகன், ‘டி.என்.ராஜரத்தினம்’ ஆனார்.  ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர், மு.கருணாநிதியின் தந்தை முத்துவேலர்.

வழக்கமான நாகஸ்வர இசைக் கலைஞர்கள் போல் உடை அணியாமல், கோட், ஷெர்வாணி அணிந்து, காலில் ஷூ போட்டுக்கொள்வார். கழுத்தில் தங்கச் சங்கிலி, கைவிரல்களில் மோதிரங்கள்,பிரேஸ்லெட்  இவற்றோடு அலங்காரமாக பவனி வந்தார். சட்டை போட்டுக்கொண்டு, பொன்னாடை போர்த்தியபடி நாகஸ்வரம் வாசித்த ஒரே ஒருவர் இவர்தான்

‘நாகஸ்வர சக்ரவர்த்தி’ என்று அழைக்கப்பட்ட இவர், பெயரில் மட்டு மல்லாமல் நிஜமாகவே ஒரு ராஜாவைப் போல வாழ்ந்தவர். கப்பல் போன்ற காரில்தான் பயணம் செய்வார். சுயமரியாதை கொண்டவர்.

இந்தியா சுதந்தரம் அடைந்த நள்ளிரவில் டெல்லியில் நடைபெற்ற விழாவில் இவரது மங்கல இசை ஒலித்தது. அந்த விழாவுக்கு இவர் ஒரு சமஸ்தான அதிபர் போல ஆடை அணிந்து சென்றிருந்தார். அவரைப் பார்த்த நேருவே ஆச்சரியமடைந்து, அவரிடம் ‘இங்கே வந்திருக்கும் சமஸ்தான அதிபர்களில் ஒருவர் என நினைத்துக் கொண்டேன்’ என்று கூறினாராம். 

இவருக்கு ஐந்து மனைவியர். ஆனால் குழந்தைகள் இல்லை. வளர்ப்பு மகன் பெயர் சிவாஜி. 1956 டிசம்பர் 12ஆம் தேதி, ராஜரத்தினம் பிள்ளை மாரடைப்பால் காலமானபோது, என். எஸ். கிருஷ்ணன், எம். ஆர். ராதா முதலானோர் உடனிருந்தனர். கவிஞர் கண்ணதாசன் இரங்கற்பா எழுதினார்

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close