நம்பரை சேவ் செய்யாமல் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் செய்வது எப்படி ?

  கனிமொழி   | Last Modified : 10 Sep, 2018 01:27 pm
how-to-send-whatsapp-message-to-unsaved-contact

நோக்கியா 1100 மொபைலில் ஒரு நாளுக்கு 100 மெசேஜ் என தொடங்கி இன்று நம் தொழில்நுட்ப வளர்ச்சியால் வாட்ஸ்ஆப், ஸ்நாப் சாட், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பல செயலிகள் மூலம் மெசேஜ் அனுப்ப ஆரம்பித்து விட்டோம். என்ன தான் வாட்ஸ்ஆப்- இல் க்ரூப் வீடியோ கால், ஆடியோ கால், பிராட்காஸ்ட் மெசேஜ் என பல அம்சங்கள் இருந்தாலும் ஒரு நபரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாமல் அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப இயலாது. ஆனால் தற்போது ஒரு புதிய அம்சமும் கொண்டு வரப்பட்டுள்ளது.

நம்பரை பதிவு செய்யாமல் அவர்களுக்கு நாம் வாட்ஸ்ஆப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி என்பதை பார்ப்போம்!

உங்கள் மொபைலில் வெப் பக்கத்தை ஓபன் செய்யவும். அதில் வரும் அட்ரெஸ் பாரில் ‘https://api.WhatsApp.com/send?phone=number’  என்று டைப் செய்யவும். மேலே கொடுக்கப்பட்ட அட்ரெஸ்ஸில் 'number' இருக்கும் இடத்தில் எந்த நபருக்கு மெசேஜ் அனுப்ப வேண்டுமோ அவர்களின் நம்பரை டைப் செய்ய வேண்டும். அவர்கள் இருக்கும் நாட்டின் கோட் நம்பரையும் (Code number) சேர்க்க மறவாதீர்.

அந்த நம்பர் வாட்ஸ்ஆப்பில் இருந்தால் மட்டுமே இந்த அம்சம் வேலை செய்யும். இப்போது  மெசேஜ் என்ற ஆப்ஷன் தோன்றும். அதனை க்ளிக் செய்வதன் மூலம் அந்த நபரின் தொலைபேசி எண்ணை பதிவு செய்யாமலே மெசேஜ் செய்யலாம். 

newstm.in

இதைப் படிச்சீங்களா?

போலீசையே மிரட்டிய புல்லட் நாகராஜன் கைது... துப்பாக்கி - கள்ள நோட்டுக்கள் பறிமுதல்!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close