என்ன சொல்லுது கூகுள் டூடுல்? போர்க்களமான போராட்டம்

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Mar, 2018 06:26 pm

இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய பசுமைப் போராட்டத்தை கூகுள் நிறுவனம் டூடுல் போட்டுக் கொண்டாடி வருகிறது. நாளு பேர் மரத்தை சுற்றி கைக்கோர்த்து நிற்பது பசுமை போராட்டமா என கேட்கலாம், ஆனால் இந்தியாவில் மிகப் பெரிய பசுமைப் போராட்டம் நடைபெற்றது என்றால் நம்ப முடியுமா?

இந்தியாவில்‘சிப்கோ இயக்கம்’ நடைப்பெற்று 45 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அதனை நினைவுப்படுத்தும் விதமாக கூகுள் நிறுவனம் அதன் முகப்பு பக்கத்தை பசுமை போராட்ட நினைவைலைகளால் அலங்கரித்துள்ளது.

மலைவாழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டி, காடுகளை அழிவில் இருந்து மீட்டெடுப்பதற்காக 1973ம் ஆண்டு சிப்கோ இயக்கத்தை சாண்டி பிரசாத் என்பவர் நிறுவினர்.

1973 ஆம் ஆண்டிலிருந்தே இயற்கை வளங்கள் சுரண்டப்படுவது மற்றும் அழிக்கப்படுவதை எதிர்த்து குரல் கொடுத்தவர் சாண்டி பிரசாத். இவர் உத்தரகாண்ட் மாநிலம் கோபேஸ்வர் பகுதியைச் சேர்ந்தவர். இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சென்ற இவர், வனங்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிகளுக்கு எதிராக மலைவாழ் மக்களை ஒன்று கூடி இயக்கத்தை ஆரம்பித்தார்.

18 நூற்றாண்டில் ராஜஸ்தான் மாநில ஜோத்பூர் மன்னன் அஜய்சிங், தனது கட்டுப்பாட்டில் இருந்த ‘மார்வார்’ வனப்பகுதியில் ஓர் அரண்மனையை கட்ட முடிவெடுத்தார். வனப்பகுதியை அழித்து அரண்மனை கட்ட திட்டமிட்ட மன்னனுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஷ்னேய் எனும் மலைவாழ் இன மக்கள் போராட்டகளத்தில் குதித்தனர்.

மன்னனை மீறி வெட்டப்பட இருக்கும் மரங்களை கட்டி அணைத்துக் கொண்டு மறித்து நின்று போராடினர். இந்தப் போராட்டத்தில் பிஞ்சுக் குழந்தைகள் கூட மரங்களை கட்டிக் கொண்டு நின்றது அப்போதைய காலக்கட்டத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எங்களை வெட்டிவிட்டு மரத்தை வெட்டுங்கள் என மரத்தை இறுக்கி கட்டிப்பிடித்து நின்றனர். இதற்கெல்லாம் மடங்காத மன்னன் போராட்டத்தில் ஈடுபட்ட அம்ரிதா தேவி மற்றும் அவரது மூன்று குழந்தைகளை வெட்டிக் கொன்றனர். அதன் பின் ஒவ்வொன்றாக 363 மரங்களை வெட்டி வீழ்த்தினர்.

பழங்குடிகளின் மொழியில் ‘சிப்கோ’ என்றால் கட்டிக் கொள்ளுதல் என அர்த்தமாம். இந்தப் பழங்குடிகளின் போராட்டத்தைத்தான் கூகுள் இன்று கெளரவித்துள்ளது. அப்போது தொடங்கிய போராட்டம் இன்று வரை நீடிக்கிறது. சிறுசிறு அடிப்படை தேவைகள் கூட மக்கள் போராட்டத்தை கையில் எடுத்தால் தான் கிடைக்கிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close