பட்டைய கிளப்புது ‘மீம்ஸ் கிரியேட்டர்ஸ் டே’ - கொஞ்சம் வாழ்த்துங்க பாஸ்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 26 Mar, 2018 07:25 pm

இன்று இணையத்தையே கலக்கி கொண்டிருக்கும் எண்டர்டெய்மெண்ட் கடவுளான மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கான தினமாம்.

தினமும் ஒரு டாப்பிக் வைத்து கொண்டு டீ ஆற்றி கொண்டிருக்கும் இவர்களுக்கு தனக்குதானே விருந்தளிக்கும் தினம் தான் ‘மீம்ஸ் கிரியேட்டர்ஸ் தினம்’.

நம் அன்றாடப் பேச்சுகளில் உலாவரும் நக்கல், நையாண்டி, எடக்கு, மடக்கு போன்றவற்றை ஒன்றிணைத்து காமெடியாக களமிறக்குவதே மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் வேலை.

பொதுவாக அரசியல் தலைவர்களின் மீம்ஸ் அதற்கு இணையான வடிவேலுவின் வசனங்கள் டிவிட்டர் பக்கத்தில் சும்மா அனல் பறக்கும்.

இன்று கொஞ்சம் வித்தியாசமாக அவர்களுக்கு அவர்களே வாழ்த்து தெரிவித்து தனக்கு தானே கலாய்த்து வருகின்றனர்.

வாழ்க்கையில் எல்லாமே ஜாலிக்கு தான். வாழ்வில் நடக்கும் சுவாரஸ்ய நிகழ்ச்சிகளை மற்றவருக்கு பகிர்ந்து அவர்களையும் மகிழ்வுற செய்ய வேண்டும் என்பதே மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் கட்சி கொள்கை.

திரையுலகில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்து சென்றாலும், காமெடி என்றால் மீம்ஸ் போடுறதுக்கு கரெக்ட் ஆன ஆளு வடிவேலுதான்.

எல்லா அரசியல் நையாண்டிக்கும் சித்திரமாக விளங்கும் வடிவேலுவின் வசனங்கள்தான் எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் உதவிக்கு வரும் நச் வசனங்கள்.

பொதுவாக இன்றைய இளசுகளின் பொழுதுபோக்காக இருப்பது டப்ஸ்மாஷ், மீம்ஸ் போன்ற சேட்டைகள் தான். ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தினம் ஒரு டாப்பிக் மனம் வருவது இந்த மீம்ஸ்களில் தான்.

மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களின் கடவுளே வடிவேலுதான். எந்தவொரு வசனத்திற்கும் அவரிடம் கிடைக்காத எக்ஸ்பிரஷன்ஸே இல்லை எனலாம்.

காலையில் அரசியல்வாதிகள் வார்த்தைகள் மாலையில் நையாண்டி மீம்ஸ்களாக உருமாறுகின்றன. மீம்ஸ்களுக்கு மிகப்பெரிய சக்தியாகவும், மிக அதிக அளவில் இமிட்டேட் செய்பவராகவும் திகழ்பவர் வடிவேலு மட்டும் தான்.

அண்மையில் தனியார் நிறுவனம் ஒன்று மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களை ஊக்குவிக்கும் வகையில் மீம் மராத்தான் என்ற போட்டியை சென்னை ஹில்டன் ஹோட்டலில் நடத்தியது. எதையுமே எதிர் பார்க்காமல் பொழுதுபோக்கிற்காக நக்கல் செய்யும் இந்த சிந்தனைவாதிகளை நாமும் கொஞ்சம் வாழ்த்தலாமே!

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close