கொரிய ராணியாக பதவியேற்ற அயோத்தி இளவரசியின் கதை 

  Newstm Desk   | Last Modified : 11 Nov, 2018 04:50 pm
the-princess-of-ayodhya-who-became-the-queen-of-korea

தென்கொரியா அதிபரின் மனைவி கிம் ஜங்-சூக் இந்த வாரம் இந்தியா வந்திருந்தார். அவர் இங்கு வந்து திறந்து வைத்த மணிமண்டபத்திற்கும், கொரிய தேசத்துக்கும்  இடையே 1960ஆம்  ஆண்டு சரித்திரப் பின்னனி ஒளிந்துள்ளது. அது தெளிவாகப் புரிந்த நிலையில்தான் தென் கொரிய அதிபரின் மனைவி இந்தியா வந்திருந்தார். அதுமட்டுமல்ல இனிவரும் ஆண்டுகளில் ஆண்டுதோறும் இந்தியா வருவதாக உறுதியளித்துள்ளார். ஓர் நாட்டின் அதிபரின் மனைவி உணர்ச்சி வசப்படும் அளவுக்கு எண்ண விஷயம் இருக்க முடியும்.

 அதையறிய நாம் சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். அதாவது அயோத்தியின்  இளவரசியாக இருந்த சூரிரத்னா கி.பி. 48-ம் ஆண்டுவாக்கில் தென் கொரியாவுக்கு சென்று அங்குள்ள ஒரு சமஸ்தானத்தின் மன்னரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் ஹர் ஹூவாங்-ஓக் என அயோத்தி இளவரசி அழைக்கப்பட்டார். இந்த வரலாறை நினைவுகூரும் வகையில் கொரியா அரசின் ஒத்துழைப்புடன் உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி நகரில் அந்த இளவரசியின் பெயரால் சுமார் 10 ஆயிரம் சதுரமீட்டர் பரப்பளவில் சரயு நதிக்கரையில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை திறந்து வைக்க தென்கொரியா அதிபரின் மனைவி  கிம் ஜங்-சூக் அந்த நினைவிடத்துக்கு வந்தார்.  பின்னர், சரயு நதிக்கரையில் மூன்று லட்சத்துக்கும் அதிகமான அகல் விளக்குகளை ஏற்றிய தீபாவளி நிகழ்ச்சியையும் அவர் கண்டுகளித்தார். ஆண்டுதோறும் தீபாவளிக்கு முதல் நாள் அயோத்தியில் நடைபெறும் கொண்டாட்டங்களில் கிம் சுங் சூக் கலந்துகொள்ள இருக்கிறார்.

யார் அந்த இந்திய நாட்டு இளவரசி 

கி. பி. 48ஆம் காலகட்டத்தில், இந்தியாவைச் சேர்ந்த 16 வயதான பேரழகியாக இருந்த இளவரசி சூரிரத்னா கனவில் ஓர் கொரிய இளவரசன் தோன்றுகிறான். கொரிய இளவரசனுக்கும் அதே போல ஒரு கனவு. அப்படி கனவில் மலர்ந்த காதலுக்கு இளவரசியின் பெற்றோர் சம்மதம் தர, இளவரசி கப்பல் மூலமாக கடல் வழியே பயணம் செய்து கொரியாவைசென்றடைகிறார். அங்கு அவரது கனவு நாயகன் இளவரசனாக உள்ளது அறிகிறார். அதே நேரம் தன்னைத் தேடி வந்துள்ள கனவு இளவரிசியையும் கொரிய இளவரசன் நேரில் கண்டு அறிகிறார். அதையடுத்து சூரிரத்னா தன் இகஉலகில் வாழ்ந்து வரும்  இளவரசனான நனவுலக நாயகன் இளவரசன் சுரோவை கரம் பற்றினார். 

சுரோ, கொரியாவின் காராக் பேரரசை ஆள்கின்ற மன்னன். அங்கு சூரிரத்னா, அரசி ஹர் ஹூவாங்-ஓக் என அழைக்கப்பட்டார். இவர்களுக்கு 12 வாரிசுகள்.  இந்த குறிப்பு 1206 – 1289ஆம் ஆண்டு காலகட்டத்தில் எழுதப்பட்ட கொரியாவின் மூன்று பேரரசுகளின் வரலாற்றுத் தொகுப்பான 'சாம்குக் யுசா' (SAMGUK YUSA)-வில் வரலாற்றுக் கதையாக இடம்பெற்றுள்ளது. கொரிய மக்கள் அரசியைத் தெய்வமாக வழிபடுகின்றனர். தென்கொரியாவின் ஜிம்குகுவான் காயா என்னும் ஊரில் அரசிக்கு சமாதி மற்றும் சிலைகள் இருக்கின்றன.

அயோத்தியில் மணிமண்டபம்!

ராணி இந்தியாவிலிருந்து கிளம்பிய இடம் 'அயுத்த' அல்லது 'ஆயித்த' என்று கருத்தப்படுகிறது. அதனால், அனேக தற்காலத் தரவுகள் அதை 'அயோத்தி' என்றே பதிவு செய்துள்ளன. அரசியைப் போற்றும் வகையில் மத்திய அரசும் தென்கொரியத் தூதரகமும் இணைந்து அயோத்தியில் ராணிக்கு மணிமண்டபம் கட்ட முடிவு செய்தன. அதன்படி தற்போது இரு நாட்டு முனைப்புடன் எழுப்பப்பட்டுள்ள இந்த மணிமண்டபம் இந்தியா - தென் கொரியா இடையே நல்லுறவை வலுப்படுத்த மற்றொரு மையப் புள்ளியாக திகழவுள்ளது. 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close