உள்மனம் சொல்வதை நம்புங்கள்!- செல்வாம்பிகாவின் 'ஸ்டார்ட் அப்' அனுபவம்

  Shalini Chandra Sekar   | Last Modified : 02 Apr, 2018 08:18 pm

‘கை நிறைய சம்பளம்ங்கறதுக்காக, நம்ம கனவை விட்டுட்டு யாரோ ஒருத்தருக்காக உழைக்கணுமா?’ என்ற கேள்வியோடு பேசத் தொடங்குகிறார் செல்வாம்பிகா பாலக்குமார். யாரிவர் என்கிறீர்களா? ‘ஈவென்ட் ஜங்க்ஷன்’ என்ற ஈவென்ட் மேனேஜ்மெண்ட் ஸ்டார்ட் அப்பை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பவர். அவரிடம் பேசினோம்...

"என் சொந்த ஊரு சிவகாசி, படிச்சு முடிச்சிட்டு சென்னைல பிரபலமான ஐ.டி கம்பெனில 6 வருஷமா சாஃப்ட்வேர் இஞ்சினியரா வேலை செஞ்சேன். ஆனா எனக்கு டிஸைனிங் மற்றும் டெகரேஷன்ல அதிக ஆர்வம். ஃப்ரெண்ட்ஸ் & அவங்க குழந்தைங்க பர்த்டேக்கு நானே சொந்த ஈடுபாட்டுல எல்லாத்தையும் அரேஞ்ச் செய்வேன். இப்படித்தான் ஒரு ஃப்ரெண்டோட குழந்தை பர்த்டேக்கு பண்ணுனத பார்த்து எல்லாரும், எந்த ஈவென்ட் மேனேஜ்மெண்டுன்னு கேக்க ஆரம்பிச்சிட்டாங்க, அப்போ தான் எனக்குள்ள இருந்த ஆர்வம் ஸ்டார்ட் அப் ஆரம்பிக்கிற தைரியத்தைக் கொடுத்துச்சு.

இப்போ கூட சமீபத்துல 500 அனாதைக் குழந்தைகள் கலந்துக்கிட்ட கிறிஸ்துமஸ் ஈவென்ட் பண்ணுனோம். பொதுவா எவ்வளவு செலவு பண்ணி ஈவென்ட் வச்சாலும், மத்தவங்க பாத்தா என்ன நினைப்பாங்களோங்கற மனநிலையில பெரும்பாலும் யாருமே முழுசா என்ஜாய் பண்ண மாட்டாங்க. ஆனா அந்தக் குழந்தைகள் எல்லாம் சின்ன சின்ன விஷயத்தைக் கூட அவ்வளவு என்ஜாய் பண்ணுனாங்க. இன்னிக்கு நாங்க புது டிரெஸ் போட்டுருக்கோம் எங்கள ஃபோட்டோ எடுங்க, போஸ் கொடுக்குறோம்ன்னு கண்ணுல சந்தோஷத்தோட சொன்னாங்க. என் கணவர் பாலக்குமாரை தவிர எல்லாருமே, கை நிறைய சம்பளத்தோட இருக்குற வேலையை விட்டுட்டு ஏன் பிஸினஸ்ல இறங்குறன்னு தான் கேட்டாங்க. ஆனா அவர் என்ன என்கரேஜ் தான் பண்ணுனார். அப்பா இல்லாத குறையை இப்போ அவர் தீர்த்து வைக்கிறார். இப்போ அவர் அமெரிக்காவுல சாஃப்ட்வேர் இஞ்சினியரா இருக்காரு, ஆனா இங்க என்ன நடக்குதுன்னு எல்லாத்தையும் அவர் கிட்ட ஷேர் பண்ணிடுவேன். ஐ.டில நான் சம்பாதிச்சத விட இந்த சொந்தத் தொழில்ல நான் ரெண்டு மடங்கு அதிகமாவே சம்பாதிக்கிறேன். என் அம்மா ஜோஸ்ஃபின் சாந்தியும் மாமியார் ஜெயமும் எனக்கு அவ்வளவு சப்போர்ட். அம்மா ஸ்கூல் டீச்சரா இருக்காங்க, எதாச்சும் பெரிய ஈவென்ட்ன்னு சொன்னா உடனே என் மாமியார் விருதுநகர்ல இருந்து கிளம்பி வந்து பையனை பாத்துக்குவாங்க.

புதுசா ஸ்டார்ட் அப் ஆரம்பிக்க நினைக்கிறீங்கன்னா, உங்களை சுத்தி இருக்கவங்க எல்லாரும் சொல்ற விஷயம், வேலையை ஏன் விடுறீங்க, சைட்ல பிஸினஸ்ஸைப் பாருங்க, அது நல்லா போனதுக்கு அப்புறம், வேலையை விடுங்கன்னு சொல்வாங்க. ஆனா நம்மளால ஒரே நேரத்துல ரெண்டு முயலை துரத்த முடியாது. எதாச்சும் ஒண்ணு தோல்வியடைஞ்சிடும். ஸோ, ஸ்டார்ட் அப் ஆரம்பிச்சதும் இது எந்தளவு ஒர்க் அவுட் ஆகும்ங்கறத நம்ம உள்மனசு சொல்லும். முதல்ல அதை நீங்க நம்பணும். உங்களுக்குன்னு ஒரு டார்கெட் வச்சுக்கோங்க. அதுக்கு டிஜிட்டல் மார்க்கெட்டிங் ரொம்ப முக்கியம்.

இன்னைக்கு எல்லாத்தையுமே ஆன்லைன்ல தான் தேடுறாங்க. அதனால குறைஞ்சது ஃபேஸ்புக்லயாச்சும் உங்க ஸ்டார்ட் அப்புக்கு ஒரு பேஜ் வச்சிக்கோங்க. பின் தங்கிய பகுதிகள்ல கூட இன்னைக்கு குடும்பத்துக்கு ஒருத்தராச்சும் ஃபேஸ்புக்ல இருப்பாங்க. டிரெண்டுக்கு ஏத்த மாதிரி அப்டேட்டா இருக்கணும். இதுக்கெல்லாம் மேல ‘வோர்ட் ஆஃப் மவுத்’ தான் ரொம்ப முக்கியம். நம்ம ஊர் சைட்ல எல்லாம் ஒண்ணு நல்லாருந்தா அத பக்கத்து வீட்டுக்காரங்கக்கிட்ட எல்லாம் சொல்வாங்க, அதுதான் இங்கேயும். அதனால பண்ற விஷயத்தை பெர்ஃபெக்டா பண்ணுங்க. எல்லாத்துக்கும் மேல பிஸினஸ்ல நஷ்டம் வராம பாத்துக்கிட்டு, உங்க மேல நம்பிக்கை வையுங்க. சாதாரணமாவே குறைஞ்சது 8 மணி நேரம் உழைக்கணும்ன்னு ஆகிப்போச்சு, அத நமக்காக உழைப்போமே'!

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.