ஃபுட் ரெவ்யூ: இடியாப்ப பிரியாணி சாப்பிட போலாமா?

  Shabnam   | Last Modified : 13 Apr, 2018 11:35 am

மதிய வேளை சரியான பசி, சாப்பிடு சாப்பிடுன்னு வயிறு பெல்லடிச்சது. இதுக்கு மேல தாங்க முடியாதுன்னு உடனே மவுண்ட் ரோட்ல இருக்குற ஹோட்டல் சங்கம்-க்கு போனேன். ESTD-1973 இப்படித்தான் அங்க இருந்த சர்வர்களோட டி-ஷர்ட்ல எழுதியிருந்துச்சு. சில ஹோட்டல்களை மட்டும் தான் இந்த ஊரோட 'ஐகானிக்'ன்னு சொல்லுவோம், இது சங்கம் ஹோட்டலுக்கு நல்லாவே பொருந்தும். நல்ல உணவோட, விலை மதிப்பில்லாத பழைய நினைவுகளை மீட்க இது சரியான இடம்.

இடியாப்ப பிரியாணி கிடைக்கும் மிக சில ஹோட்டல்கள்ல் சங்கமும் ஒண்ணுன்னு எனக்கு முன்னாடியே தெரியும், ஆனா அங்கக் கிடைக்குற நல்லி பிரியாணி பத்தி என் ஃபிரெண்ட் சொன்னதும் தான் தெரிய வந்துச்சு. ஸோ, ஒருநாள் இடியாப்ப பிரியாணி, இன்னொரு நாள் நல்லி பிரியாணின்னு டேஸ்ட் பண்றதுக்காக, ரெண்டு முறை சங்கம் ஹோட்டலை விசிட் பண்ணுனேன்.

முதல் விசிட் மதிய சாப்பாட்டுக்காக மட்டன் நல்லி பிரியாணி சாப்பிட போனேன். 325 ரூபாய் நல்லி பிரியாணி, டீப் ஃப்ரை ஆனியன், முந்திரி எல்லாம் போட்டு ரெடியா வந்துச்சு. என் பசியை தூண்டாட்டியும், இதுவரைக்கும் நான் சாப்பிட்ட பிரியாணிகள்ல, நிறைய ஃப்ளேவர்ஸ் இருந்த பிரியாணில இதுவும் ஒண்ணு. அடிப்படையில எனக்கு பிரியாணில ட்ரை ஃப்ரூட்ஸ் இருந்தா பிடிக்காது. அதை தவிர்த்து நல்லி பிரியாணி நிச்சயமா 'யம்மி' தான். சாப்பிடும்போது டீப் ஃப்ரை ஆனியன் அதோட சொந்த பரிமாணமான எரிச்சலைக் கொடுக்கவும் மறக்கல. மிருதுவான நல்லி எலும்பு பிரியாணி, விலை அதிகம் தான். இருந்தாலும் அளவு திருப்தியா இருந்துச்சு. கத்திரிக்காய் கிரேவி எனக்குப் பிடிச்ச மணத்தோட சூப்பர்ப்.

அடுத்து 'ஷோ டாப்பரா' வந்தது அவங்களோட ப்ரான் பிரியாணி. 225 ரூபாய்க்கு காரசாரமா இருந்த இந்த பிரியாணி ஃபென்டாஸ்டிக். அப்புறம் 205 ரூபாய் மதிப்புள்ள ப்ரான் ஃப்ரையும் நல்லாருந்தது.
ஜி.எஸ்.டி எல்லாம் சேத்து அன்னிக்கு சாப்பிட்ட லஞ்ச் பில் ரூ.793

இன்னொரு நாள் டின்னர்க்கு மட்டன் இடியாப்ப பிரியாணி சாப்பிட போனேன். ஸ்பைசியா 165 ரூபாய் விலையுள்ள இது பாக்க மட்டும் தான் இடியாப்பம், ஆனா டேஸ்ட் அப்படியே மட்டன் பிரியாணி மாதிரி இருந்துச்சு. இதுல ட்ரை ஃப்ரூட்ஸை கொஞ்சம் தாராளமாவே சேர்த்திருந்தாங்க.

அப்புறம், கால் பிளேட் மட்டன் குருமா 110 ரூபாய். ரொம்ப டெலிஷியஸா இருந்துச்சு. தேங்காய் பால்ல வேக வச்ச சாஃப்டான மட்டன் பீஸும் கிரேவியும் தோசையோட சேத்து சாப்பிடும் போது, அட அட சொர்க்கம் மாதிரி இருந்தது. அப்புறம் அந்த தோசை 35 ரூபாய், அதுவும் ஹெவன் தான்!

டீ யோட முடிக்காத சாப்பாடு சாப்பாடே இல்ல. அதனால ஒரு 25 ரூபாய்க்கு டீயும் கடைசியா குடிச்சு, சங்கம் ஹோட்டலுக்கு பை பை சொல்லியாச்சு. முட்டை தோசை, சிக்கன் 65 போன்லெஸ்ஸும் சேத்து டின்னருக்கான பில் மொத்தம் 598 ரூபாய். ஏன் முட்டை தோசையையும், 65யையும் பத்தி சொல்லலன்னு நினைக்கும் போதே உங்களுக்கு தெரிஞ்சிருக்கும், அது ரொம்ப நார்மல் தான்னு...
சரி, இப்போ ஹோட்டல் சங்கம்-க்கு நேரா வண்டியை விடுங்க...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close