இதயத்துக்கு இதம் தரும் ரஹ்மானின் 10 மேற்கோள்கள்!

  Sujatha   | Last Modified : 13 Apr, 2018 05:24 am

"நீங்கள் விமர்சிக்கப்படவில்லை எனில், சோம்பேறியாகி விடுவீர்கள். ஆனால், விமர்சனங்கள் ஆக்கபூர்வமானதும் உண்மையானதுமாக இருக்க வேண்டும். உண்மையும் நடுநிலையும் இல்லாத விமர்சனங்களை கண்டுகொள்ளவே மாட்டேன். விமர்சனம் உண்மை எனில், அது வளர்ச்சிக்கு உதவும்."

"நீங்கள் ஒரு மொழியையும் கலாச்சாரத்தையும் மதிப்பது, உங்களது படைப்புகளிலும் வெளிப்படும்."

"எனக்குப் பல்வேறு பொறுப்புகளும் கொள்கைகளும் உள்ளன. குற்ற உணர்வுக்கு வித்திடும் சிற்றின்பங்களுக்கு நேரமில்லை."

"வாழ்வில் தங்கள் பெருங்காதல் மிக்கவை மீது அனைத்தையும் அர்ப்பணிப்போரிடம் தான் வெற்றி வந்துசேரும். எளிமையைப் பின்பற்றுதலும், தலைக்குள் புகழும் பணமும் புக விடாததுமே வெற்றிக்கு மிக முக்கியம்."

"நண்பனாக இருக்க வேண்டிய நேரங்களில் நண்பனாகவும், தந்தையாக இருக்க வேண்டிய நேரங்களில் தந்தையாகவும், இசைக்கும் நேரத்தில் இசையமைப்பாளராகவும் என் பங்களிப்பை மாற்றிக் கொள்கிறேன்."

"நமக்குள் பிறப்பது ஞானம். அறிவு என்பது பெறப்படுபவை; சில நேரங்களில் உங்கள் ஞானத்தை திரை கொண்டு மூடவல்லது அறிவு."

"நான் ஒவ்வொரு பாடலையும் ரசித்துதான் இசையமைப்பேன். அப்போதுதான் அதை சிறப்பாகக் கொடுக்கமுடியும்."

"உங்கள் ஆழமனக் குரல்தான் தெய்வீகத்தின் குரல். எந்தக் கூட்டத்தில் இருந்தாலும், அந்தக் குரலைக் கேட்க நமக்கு தனிமை அவசியம்."

"எனது வாழ்க்கை முழுவதிலும் அன்பு அல்லது வெறுப்பு இவற்றில் ஒன்றை நான் தேர்வுசெய்ய வேண்டியிருந்தது. வெறுப்புக்குப் பதிலாக நான் அன்பு வழியைத் தேர்ந்தெடுத்தேன்."

"நான் இசையை மென்மேலும் கற்றுக்கொண்டு வருகிறேன். இசை என்பது ஒரு சமுத்திரம் என்பதால், 'எல்லாம் தெரியும்' என ஒருபோதும் சொல்ல முடியாது."

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close