சிந்து சமவெளியினர் தென்னகம் வர இதுதான் காரணமாம்!

  Padmapriya   | Last Modified : 17 Apr, 2018 12:19 pm

சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்த காரணம் குறித்து கோரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் தலைமையில் ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து வழங்கிய அறிக்கையை சர்வதேச விஞ்ஞான பத்திரிகை ஏற்றுக் கொண்டுள்ளது.

சுமார் 4 ஆயிரத்து 350 ஆண்டுகளுக்கு முன்பு, சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் தான் சிந்து சமவெளியினர். இது, தற்போதைய இந்தியா, பாகிஸ்தான், பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பிராந்தியமாக அப்போது இருந்தது. சுமார் 15 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுக்கு அவர்களது வாழ்விடம் பரவி இருந்தது. அவர்களது நாகரிகம், சிந்து சமவெளி நாகரிகம் என்று அரியப்பட்டது.

இவர்களது வாழ்க்கை முறை குறித்து ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், அவர்களைப் பற்றிய புதுப் புது தகவல்களை தெரிவிக்கின்றன.

அதன்படி, ஒரு காலகட்டத்தில், சிந்து சமவெளி மக்கள் தென்னிந்தியாவுக்கு இடம்பெயர்ந்தனர். இது குறித்து தான் கோரக்பூரில் உள்ள ஐ.ஐ.டி. பேராசிரியர் அனில் கே.குப்தா தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்தது. அவர்களின் கண்டுபிடிப்புகளை, எல்செவியர் என்ற சர்வதேச விஞ்ஞான பத்திரிகையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

அந்த ஆய்வுக்கட்டுரையில், "சிந்து சமவெளிப் பகுதி, நன்கு வளர்ச்சி அடைந்த கட்டமைப்புகளும் வசதிகளும், கட்டுமான கலையையும் கொண்டது. அதன் மக்கள் உலகின் பல்வேறு நாகரிக மக்களுடன் வர்த்தக, கலாசார உறவும் கொண்டிருந்தனர். அதில் தேர்ந்தவர்களாக இருந்தனர்.

'எல் நினோ' விளைவின் காரணமாக, சிந்து சமவெளியில் 900 ஆண்டுகளாக வறட்சி நீடித்தது. மழை பெய்யவில்லை என்று கூற முடியாது. ஆனால் நீரோட்டம் குறைந்துவிட்டது. அதற்கு அந்தப் பகுதியின் பூலோக அமைப்பும் தான் காரணம். அதனால், அப்பகுதி வறண்ட பிரதேசம் ஆனது.

விவசாயத்துக்கும், கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் இல்லை. இவைதான் அம்மக்களின் முக்கியமான தொழில்கள் என்பதால், அவர்கள் பருவமழை அதிகமாக பெய்யும் இந்தியாவின் தென் மற்றும் கிழக்கு பகுதிக்கு இடம்பெயர்ந்தனர் என்று அவர்களது ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.