Food Review: ரொமாண்டிக்கான 'ரோஸ் மில்க் வேஃப்பில்'

  Shabnam   | Last Modified : 23 Apr, 2018 01:19 pm

இந்த வாரம் அண்ணாநகர்ல இருக்குற கோகோ ஜான்ட் 1728-க்குப் போயிருந்தேன். இவங்களோட மெனுவுல எப்போவும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கும். கோகோ ஜான்டோட சிக்கன் பப்ஸும், வித்தியாசமான குக்கீஸுக்கும் நான் பெரிய ஃபேன். போகும்போதெல்லாம் அதை மிஸ் பண்ணவே மாட்டேன். தோசை வேஃப்பில்ஸ்ன்னு அவங்களோட புது மெனுவை பார்த்ததும் அப்படியே 'டெம்ப்ட்' ஆகிட்டேன்.

தோசை வேஃப்பில்ஸ் வித் கோழி ரோஸ்ட் செம்ம டேஸ்ட்டா இருந்துச்சு. உண்மையை சொல்லணும்ன்னா, 225 ரூபாய்க்கு வாங்குனது கல் தோசையும், கோழி ரோஸ்ட் மாதிரி இருந்தாலும் அவங்களோட இந்த ஃப்யூஷன் காம்பினேஷனை கட்டாயம் பாராட்டியே ஆகணும்.

175 ரூபாய் விலையுள்ள சோபா டி டார்டில்லா பிரசன்ட் பண்ணிருந்த விதமே தனி அழகா இருந்துச்சு. ஊறிப்போகாம இருந்த அந்த டார்டில்லா எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. அதோட கொத்தமல்லி நறுமணம் பசியை தூண்டுச்சு.

இப்படி என்ன இம்ப்ரெஸ் பண்ணின கோகோ ஜான்ட்ல நான் திரும்பவும் இம்ப்ரெஸ் ஆனேன். எதுல தெரியுமா நெய் ரோஸ்ட் சிக்கன், இதுவும் 225 ரூபாய். ஊத்தாப்பத்துல நெய் ரோஸ்டட் சிக்கனை பரிமாறினாங்க. முதல்ல சாப்பிட்ட கோழி ரோஸ்ட் மாதிரியே இருந்தாலும், இதோட ஃப்ளேவர் முழுக்க முழுக்க வேற ஒண்ணு. ரியல்லி ஐ லவ் திஸ்!

லவ்வ பத்தி பேசும்போது எப்படி அவங்களோட ஆச்சரி தவா சிக்கனை பத்தி சொல்லாம இருக்க முடியும்? மாங்காய் ஊறுகாய் 'பேஸ்'ல சிக்கனை கிளப் பண்ணிருந்தாங்க பாருங்க, டேஸ்ட் அற்புதமா இருந்துச்சு.

அவங்களோட சோய் ஸ்மோக்டு மஷ்ரூமை எதிர்பார்த்துட்டு இருந்தேன். 175 ரூபாய், இதோட டேஸ்ட் மத்த இந்தோ-சைனீஸ் உணவுகளோட டேஸ்ட் மாதிரி தான் இருந்தது, பெருசா கம்ப்ளயின்ட்ஸ் எதுவும் இல்லை.

காஜூ ரைஸ் வித் ப்ரான் அண்ட் சாஸ் 225 ரூபாய். நல்லாருந்தது. இங்க இன்னொரு விஷயம் என்னன்ன, எல்லா டிஸ்ஸும் திருப்திகரமான அளவுக்கு தர்றாங்க.

கடைசியா எல்லோருக்கும் பிடிக்குற ரோஸ்மில்க் வேஃப்பில், 250 ரூபாய். முக்கியமா என்ன மாதிரி ரோஸ் மில்க் ஃபேனா இல்லாதவங்களுக்கும் இது பிடிக்கும். அதோட பிரசன்டேஷன் கொஞ்சம் ரொமாண்டிக்கா இருக்கும். கப்புள்ஸ்க்கு ஏத்த டிஷ்.

ஆனா நமக்கு ஃபுட் மேல தான் ரொமான்ஸ் வரும்ங்கறனால, அடுத்ததா 160 ரூபாய்க்கு மைலோவும், 140 ரூபாய்க்கு மேங்கோ மொஜிட்டோவும் ஆர்டர் பண்ணினேன். பட் பாருங்க, இது மட்டும் நல்லாவே இல்லை.

அதனால நான் கடைசியா சொன்னத தவிர மத்த எல்லா ஐட்டத்தையும் கோகோ ஜான்ட்ல தாராளமா ட்ரை பண்ணலாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close