புகைப்படத்தால் உலகை படம்பிடித்த பிரபலங்கள்!

  Newstm Desk   | Last Modified : 06 May, 2018 11:09 pm

இந்த டிஜிட்டல் உலகில், போட்டோகிராபி எல்லோர் கையிலும் வந்துவிட்டது. செல்ஃபி மோகம் இன்று போட்டோகிராஃபியை வளர்க்கிறதோ இல்லையோ பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மை. புகைப்படங்கள் என்பது நம்முடைய வாழ்வின் நிகழ்வுகளை, உணர்ச்சியை பதிவு செய்யும் ஒரு கருவியாக உள்ளது. உலகின் சில சிறந்த புகைப்படங்களை எடுத்தவர்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்...

ஸ்டீவ் மெக்குரி

புகழ்பெற்ற புகைப்பட நிபுணர் ஸ்டீவ் மெக்குரி. இவர் 14 வயதான ஷர்பாத் குலா என்ற ஆப்கான் பெண்ணை சோகம் நிறைந்த கண்களுடனான புகைப்படத்தை படம்பிடித்து அதனை 1985ம் ஆண்டு ஜூன் மாத நேஷனல் ஜியோகிராஃபி இதழில் அட்டைப்படமாக வெளியிட்டார். அழகும் அதிர்ச்சியும் நிறைந்த பச்சை நிற கண்கள், சோகத்தில் மூழ்கிய பார்வை கொண்ட சிறுமியின் புகைப்படம் பார்ப்பவரை மிரள வைக்கிறது.

லீ ஜெஃப்பீரிஸ்

லண்டனை சேர்ந்த புகழ்பெற்ற புகைப்படக்காரர் லீ ஜெஃப்பீரிஸ் சோகமான புகைப்படங்களை பேசும் சித்திரங்களாக தீட்டுவதில் வல்லவர். பிளாக் அண்ட் ஒயிட் காதலரான இவர், கலர் ஓவியங்களை வரைவதில்லை. இளம் வயதிலே பெற்றோரை இழந்த இவர், வீடு, வாசல் இன்றி தெருவில் தள்ளப்பட்டார். இதனால் வீடுகள் இன்றி தவிக்கும் ஆதரவற்றோர்கள், வீடு இல்லாமல் தெருவில் வாழும் வயது முதியவர்களின் வாழ்வை உருக்கமான தன் ஓவியத்தால் பேச வைப்பவர் லீ ஜெஃப்பீரிஸ்.

ஜிம்மி நெல்சன்

ஜிம்மி நெல்சன் இங்கிலாந்தைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர். உலகத்தில் அழியும் தறுவாயில் இருக்கும் பழங்குடியினரையும், மலைவாழ் மக்களையும் புகைப்படம் எடுத்து பதிவு செய்பவர். ஐரோப்பா, ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, தெற்கு பசிபிக் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்து ’Before They Pass Away’ என்ற தலைப்பில் 30 வகையான மலைவாழ் மக்களை புகைப்படம் எடுத்துப் பதிவு செய்துள்ளார்.

ரெஹான்

வியட்நாம், இந்தியாவின் ராஜஸ்தான் மற்றும் கியூபா ஆகியவற்றை படம்பிடிக்கும் கேமராவாக ரெஹான் திகழ்கிறார். மனிதனின் ஆன்மாவை அழகாக பேசும் இவரின் புகைப்படங்கள் உலக அளவில் சிறந்த புகைப்படங்களாக விருது பெற்றவை. பழங்குடியினரின் பாரம்பரியத்தை புகைப்படங்களாக செதுக்குவதில் வல்லவரான இவர், வியட்நாமில் கடந்த ஆண்டு 2017ம் ஆண்டு புகழ்பெற்ற பாரம்பரிய கலை அருங்காட்சியகத்தை திறந்தார்.

எரிக் லாஃபெர்குயூ

வட கொரியாவில் உள்ள பிரபல புகைப்படக்காரர் எரிக் லாஃபரோகு. இவர் எடுத்த புகைப்படங்கள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கதை உண்டு. நமீபியா பழங்குடியினரிடமிருந்து குர்திஸ்தானின் யெஸ்ஸிடிஸ் பழங்குடியனரின் புகைப்படங்கள் வரை, ஒவ்வொன்றிற்கும் ஒரு கதைகள் உண்டு. உண்மையான உணர்ச்சிகளை சித்தரிக்கும் திறன் கொண்டவை இவரின் புகைப்படங்கள்!

மேனி லிப்ரோடோ

'ஃபோட்டோஷாப் மந்திரவாதி' என அழைக்கப்படும் மேனி லிப்ரோடோ, கேமரா எனும் மேனியின் கண்கள் வழியாக அனைவரும் உலகை பார்க்க வேண்டும் என்பதே அவரின் ஆசை. பிலிப்பைன்ஸ், ஆசியாவில் எடுத்த இவரது புகைப்படங்கள் மிகவும் புகழ்பெற்றவை.

லீசா கிறிஸ்டின்

லிசா கிறிஸ்டின் ஒரு மனிதாபிமான புகைப்படக் கலைஞர் ஆவார், இவர் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள பழங்குடி கலாச்சாரங்களை ஆவணப்படுத்தியுள்ளார். இவரின் புகைப்படங்கள் துணிச்சலான, தைரியமான, பரபரப்பான, விழிப்புணர்வினை ஏற்படுத்தும் படங்களாகவே காட்சியளிக்கும்.

ஜோயா சாண்டோஸ்

குடிமக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் அர்த்தமுள்ள ஓவியங்களாக ஜோயா சாண்டோஸ் புகைப்படங்கள் பிரதிபலிக்கின்றன. இன் நேச்சர் இன் பிரைட் பிரீஜ் (2006) மற்றும் ஹானரபிள் மேன்ஷன் (2007) உள்ளிட்ட பல தேசிய மற்றும் சர்வதேச புகைப்பட விருதுகளை வென்றுள்ளார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.