தேசிய இளைஞர் தினம் !!

  Sujatha   | Last Modified : 12 Jan, 2018 08:33 am


இளைஞர்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழும் சுவாமி விவேகானந்தர் 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. அவர் ஒரு துறவியாக மாறிய போது, தனது இயற்பெயரை ‘சுவாமி விவேகானந்தர்’ என்று மாற்றிக் கொண்டார்.  இவரது பிறந்த நாளை, இந்திய அரசு 1984இல் தேசிய இளைஞர் தினமாக அறிவித்தது.

இவர் ராமகிருஷ்ணா பரமஹம்சரின் தலைமை சீடரான இவர். "ஸ்ரீ ராமகிருஷ்ணர் மடம்" மற்றும் "ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன்" போன்ற அமைப்புகளையும் நிறுவியுள்ளார்.

சுவாமி விவேகானந்தர், ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உதவியற்றோர் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் நலனுக்காகவும், நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த தியாகத்தின் வாழும் அவதாரமாகத் திகழ்ந்தவர். 

இவரது ஆணித்தரமான, முத்துப் போன்ற வார்த்தைகளும், பிரமாதமான பேச்சுத்திறனும் உறங்கிக் கொண்டிருந்த  தேசிய உணர்வைத் தூண்டியது.

1893ல் சிகாகோவில் நடந்த உலக மதங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையை தொடங்குவதற்கு முன் "அமெரிக்காவின் சகோதர சகோதரிகளே!" என்று ஆரம்பித்தார். சுவாமி விவேகானந்தர் இங்கிலாந்துக்கும் சென்றார். அங்கே பல மக்கள் இவருக்கு சீடர்களாக மாறினர். அவர்களில் மிகவும் பிரபலமானவர் "மார்கரெட் நிவேதிதா".

மேலை நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் அவர்கள், கல்கத்தா அருகில் பேலூரில் அவரால் நிறுவப்பட்ட ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தில்’ ஜூலை 4, 1902 அன்று தந்து 39வயதில் இறந்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close