சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்தநாள் சிறப்பு கட்டுரை!

  Sujatha   | Last Modified : 23 Jan, 2018 02:10 pm


பெயர் : சி. கோவிந்தராசன்

பிறப்பு: 19 ஜனவரி 1933

பெற்றோர்: சிவசிதம்பரம், அவையாம்பாள்

பிறப்பிடம்: சீர்காழி

இறப்பு: 24 மார்ச் 1988.

கர்நாடக இசைப் பாடகரும், திரைப்பட பின்னணிப் பாடகருமான சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் 1933ம் ஆண்டு ஜனவரி 19ஆம் தேதி நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்தார்.

பி.எஸ்.செட்டியார் அறிவுரையின்படி சென்னை தமிழ் இசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். இவர் இசைமாமணி பட்டமும் (1949), சங்கீத வித்வான் பட்டமும் (1951) பெற்றார். சென்னை மியூசிக் அகாடமியில் 1951-ல் நடந்த போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றார்.

1953-ல் பொன்வயல் என்ற படத்தில் சுத்தானந்த பாரதியின் சிரிப்புத்தான் வருதையா என்ற பாடலை தன் வெண்கலக் குரலில் பாடி தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். இதற்கு முன்னரே ஒளவையார் திரைப்படத்துக்காக ஆத்திச்சூடி பாடியிருந்தார்.

சங்கீத அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தெய்வத் திருமணங்கள், அகத்தியர், ராஜராஜசோழன் உள்ளிட்ட பல படங்களில் தனது அபார நடிப்பாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார்.

தன் இனிமையான குரலால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்ட சீர்காழி கோவிந்தராஜன் 55-வது வயதில் (1988) மறைந்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.