இந்திய செய்தித்தாள் தினம்

  Sujatha   | Last Modified : 29 Jan, 2018 04:13 pm


ஆண்டுதோறும் ஜனவரி 29ஆம் தேதி இந்திய செய்தித்தாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

இந்தியாவில் முதன்முதலாக  ஹிக்கீ’ஸ் பெங்கால் கெஜெட் (Hicky Bengal Gazette) என்கிற வார இதழ் வெளிவந்தது. இதனை ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ (James Augustus Hickey) என்பவர் 1780ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி வெளியிட்டார். 

இப்பத்திரிகை கொல்கத்தாவிலிருந்து வெளிவந்தது. அரசியல் மற்றும் வர்த்தக ரீதியான இதழாக வெளிவந்தது. அப்போது நடந்த போர்ச் செய்திகளை பத்திரிகையில் வெளியிட்டார். அது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மேலும், முதன்முதலில் வெளிவந்த இந்த வார இதழில் சோப் நிறுவனத்தின் விளம்பரம் இடம் பெற்றிருந்தது. அதில் ஒரு பெண்ணின் முகம் மற்றும் உடல் கவர்ச்சியாக காட்டப்பட்டிருந்தது. 

இந்தியாவில் வெளிவந்த முதல் வார இதழ் என்பதால் அத்தினத்தை  இந்திய செய்தித்தாள் தினமாக கொண்டாடப்படுகிறது. தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close