உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர் ஜி.ஹெச்.ஹார்டியின் பிறந்தநாள் இன்று

  Sujatha   | Last Modified : 07 Feb, 2018 08:00 pm


  1. கணிதமேதை ராமானுஜனை உலகுக்கு அறிமுகம் செய்த ஜி.ஹெச்.ஹார்டி 1877ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் பிறந்தார். 
  2.  இரண்டு வயதிலேயே மில்லியன் வரை எண்களை எழுதும் அளவிற்கு ஆற்றல் பெற்றிருந்தார். ஜே.இ.லிட்டில்வுட் என்ற கணிதவியலாளருடன் இணைந்து 35 ஆண்டுகாலம் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.
  3. இந்திய கணிதமேதை ராமானுஜனிடம் இருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அதை பார்த்ததுமே ராமானுஜனின் அறிவாற்றலைப் புரிந்துகொண்டார். அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.
  4. இருவரும் இணைந்து ஆய்வுகள் மேற்கொண்டு வெளியிட்ட "ஹார்டி - ராமானுஜன் அசிம்டாடிக்" சூத்திரம் மிகவும் பிரபலமானது. இவரது வாழ்க்கை மற்றும் ராமானுஜனுடனான நட்பு ஆகியவற்றை தொகுத்து "தி இந்தியன் கிளார்க்" என்ற நாவல் 2007-ல் வெளிவந்தது.
  5. இவர் ராயல் மெடல், சில்வெஸ்டர் மெடல், காப்ளே மெடல் உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். உலகின் தலைசிறந்த கணிதமேதைகளில் ஒருவரான ஜி.ஹெச்.ஹார்டி தனது 70வது வயதில் (1947) மறைந்தார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close