உலக தாய்மொழி தினம் இன்று!

  Sujatha   | Last Modified : 21 Feb, 2018 12:07 pm


உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்துவிட்டன. எனவே அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளை சக மனிதனுக்கு மொழியாலே தெரிவிக்கிறான். அப்படி ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு.  அந்த மொழியை அழிக்காமல் பாதுகாப்பதே சிறந்த குடிமகனின் பொறுப்பு. 

பல மொழி புலமை பெற்ற பாரதியார் "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்"  என்று குறிப்பிடுகின்றார்.

காந்திஜியும் தன் சுயசரிதையான சத்திய சோதனையை முதலில் தம் தாய்மொழியான குஜராத்தியில் எழுதினார் என்பதும் தாய்மொழிக்கான சிறப்பாகும். மேலும், இந்திய தேசிய கீதம் இயற்றியவரும், நோபல் பரிசு பெற்றவரும், ஆங்கில மொழியில் கவிதைகளை திறம்பட எழுதியவரும் ஆகிய ரவீந்தரநாத் தாகூரும் தன் தாய்மொழியான வங்களாத்தில் நன்கு புலமைப் பெற்றதாலே கவிதை உலகில் புகழின் உச்சியை தொட்டார்.

ஆனால் மாடர்ன் லைஃப் என்ற பெயரில் சிலர் தமது தாய்மொழியில் பேசுவது அவமானமாக கருதி அந்நிய மொழியின் மேல் காதல் கொண்டுள்ளனர். அந்நிய மொழியை கற்பதோ, பேசுவதோ தவறு அல்ல... ஆனால் உனது தாய்மொழியை படிக்க தெரியாமலும், பேச தெரியாமல் இருப்பது அசிங்கம் அல்ல அவமானம். மூவாயிரம் ஆண்டுகள் பழமையான (முதன்மையான) தமிழை அழிக்காமல் இருக்க இன்று முதல் தமிழர்களிடம் தமிழில் பேசுவோம் என்ற உறுதி எடுப்போம்.

வாழ்க தமிழ்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close