• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

ஜேன் ஆர்மிண்டா டெலானோ - அறிய 5 தகவல்கள்

  Sujatha   | Last Modified : 13 Mar, 2018 08:04 am


நவீன செவிலியர் பணியின் முன்னோடியும் அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் சேவையைத் தொடங்கியவருமான ஜேன் ஆர்மிண்டா டெலானோ (Jane Arminda Delano) பிறந்த தினம் இன்று (மார்ச் 13). அவரைப் பற்றி அறிய 5  தகவல்கள்:

* ஜேன் ஆர்மிண்டா டெலானோ 1862ஆம் ஆண்டு மார்ச் 13ஆம் தேதி அமெரிக்காவின் மான்டுர் ஃபால்ஸ் கிராமத்தில் பிறந்த இவர் 1886-ல் நர்ஸிங் பயிற்சியில் பட்டம் பெற்ற பிறகு புளோரிடா ஜாக்சன்வில் மருத்துவமனையில் 1888-ல் பணிக்குச் சேர்ந்தார். அங்கு மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனித்து வந்தார். மேலும் இவர் செவிலியரின் பணிகளில் பல புதுமையான பயனுள்ள வழிமுறைகளைக் கொண்டு வந்தார். 

* 1898-ல் அமெரிக்க ஸ்பெயின் போரின்போது நியூயார்க் நகரின் அமெரிக்க செஞ்சிலுவை அமைப்பின் உறுப்பினரானார். செஞ்சிலுவை அமைப்புக்கு செவிலியர்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும் இவருக்கு வழங்கப்பட்டது.

* தான் படித்த பெலவ்யூ செவிலியர் பயிற்சிப் பள்ளியின் தலைவராக 1902-ல் நியமிக்கப்பட்டு 1909-வரை அங்கு பணிபுரிந்தார். பின்பு செவிலியர் பணியில் இவரது சிறப்பான பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அமெரிக்க செவிலியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். இப்பதவியை 3 முறை வகித்தார். 

* தனி ஒருவராகப் பாடுபட்டு அமெரிக்க செஞ்சிலுவை செவிலியர் அமைப்பை உருவாக்கினார். முதல் உலகப் போரின்போது இவரது முயற்சியால் செஞ்சிலுவை அமைப்பில் இணைந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் காயமடைந்த போர் வீரர்களுக்கு ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கது.

* ஐரோப்பாவில் 1918-ல் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அங்கு சென்று நோயாளிகளுக்கு சேவையாற்றினார். இறுதிமூச்சு வரை தன்னலம் கருதாமல் பிறருக்காக சேவைபுரிந்த ஜேன் டெலானோ தனது 57வது வயதில் (1919) மறைந்தார்.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.