தேசியக் குயில் 'டி.கே.பட்டம்மாள்' பற்றிய சிறப்பு தொகுப்பு

  Sujatha   | Last Modified : 28 Mar, 2018 07:32 am


# தேசியக் குயில் என போற்றப்பட்ட பிரபல கர்நாடக இசைப்பாடகி தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் 1919ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தை அடுத்த தாமல் என்ற ஊரில் பிறந்தார். இவருடைய இயற்பெயர் அலமேலு.

# இவர் நான்கு வயது முதல் பாடத் தொடங்கினார். இவருடைய தந்தை இவரை மேடையேற்ற தயங்கினார். பட்டம்மாளின் பள்ளி தலைமை ஆசிரியர் இவரது திறனை உணர்ந்து தந்தையின் அனுமதியை பெற்றுத் தந்தார்.

# காந்திஜி காஞ்சிபுரம் வந்தபோது அவரிடம் பாரதியார் பாடலைப் பாடி பாராட்டு பெற்றார். முதன்முறையாக வானொலியில் 1929-ல் பாடினார். இவருடைய முதல் கச்சேரி 1932-ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் அரங்கேறியது.

# நாடு விடுதலை அடைந்த இரவு முழுவதும் விடுதலை விடுதலை, ஆடுவோமே பள்ளு பாடுவோமே போன்ற தேசபக்திப் பாடல்களை அகில இந்திய வானொலியில் பாடினார். ஆனால், அதற்கு ஊதியம் பெற மறுத்துவிட்டார். காந்தியடிகள் மறைந்தபோதும் வானொலியில் பாடியவர் ஊதியம் வாங்க மறுத்துவிட்டார். 

# முத்துஸ்வாமி தீட்சிதரின் பாடல்களைப் பாடுவதில் இவர் சிறந்து விளங்கினார். பாபநாசம் சிவன் இவரை திரையுலகுக்கு அறிமுகம் செய்தார். தியாக பூமி (1939) படத்தில் முதன்முதலாக தேச சேவை செய்ய வாரீர் என்ற பாடலை பாடினார்.

# பத்ம விபூஷண், பத்மபூஷண், கலைமாமணி, சங்கீத கலாநிதி, சங்கீத நாடக அகாடமி, இசைப் பேரறிஞர், சங்கீத கலாசிகாமணி, காளிதாஸ் சம்மன் என பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் தன்னுடைய 90வது வயதில் (2009) மறைந்தார். 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close