இ.எஸ்.ஐ.சி மற்றும் மத்திய கலால் வரி தினம்

  Sujatha   | Last Modified : 24 Feb, 2018 08:44 am


மத்திய கலால் வரி தினம் (Central Excise Day)

இந்திய அரசாங்கத்தால் 1944ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று வரம்பு மீறப்பட்ட பொருட்களின் மீதான வரிகளை சேகரிக்க மத்திய மசோதா சட்டம் உருவாக்கப்பட்டது. 

சரக்கு உற்பத்தி தொழிலில் உள்ள ஊழலைத் தடுக்கவும் சிறந்த சுங்கவரி சேவைகளை மேற்கொள்ள மற்ற விதிகளை நடைமுறைப்படுத்தவும் இந்தியாவில் சிறந்த சமூக-பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது. 

இத்தினத்தில் நேர்மையாக பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் உண்மையான சேவையை பாராட்டி விருதுகள் வழங்கி கௌரவிக்கிறது.


இ.எஸ்.ஐ.சி நிறுவன தினம் (E.S.I.C Day)

பண்டிட் ஜவஹர்லால் நேருவினால் 1952 பிப்ரவரி 24ஆம் தேதி கான்பூரில் இ.எஸ்.ஐ (Employees state insurance corporation) திட்டம் தொடங்கப்பட்டது. 

தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் சமூக பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இது தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வப்பொழுது நேரிடும் சுகவீனம், பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு, வேலை செய்யும் போது விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம், சம்பவிக்கும் காலங்களில் பண உதவி வழங்கியும் தொழிலாளர்கள் தாம் செய்யும் வேலையால் ஏற்படும் சுகவீனம், தற்காலிக இயலாமை போன்ற காலங்களில் தொழிலாளர்களுக்கும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் உரிய முழு மருத்துவச் சேவையுடன் கூடிய பராமரிப்பை வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டு, சட்டச்செயல் வடிவம் கொண்டு அமல் செய்யப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close