தேசிய தடுப்பூசி தினம்

  Sujatha   | Last Modified : 16 Mar, 2018 01:21 pm


போலியோ இல்லாத நாடாக மாறிவிட்டோம்... அதற்கு முதல் அடி எடுத்து வைத்த இன்றைய தினம் (மார்ச் 16ம் தேதி) தேசிய தடுப்பூசி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

போலியோ என்ற கொடிய இளம்பிள்ளைவாத நோய் குழந்தைகளின் கைகால்களை நிரந்தரமாக செயலிழக்கச் செய்கின்றன. போலியோ நுண்கிருமிகள், அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் மூலம் குழந்தைகளிடையே பரவுகின்றன. 

அதற்காக 1995ஆம் ஆண்டு இந்தியாவில் போலியோ ஒழிப்பு இயக்கம் துவங்கப்பட்டது. ஆண்டிற்கு இரண்டு முறை போலியோ சொட்டு மருந்து நாடு முழுவதும் வழங்கப்பட்டதன் மூலம் 2014ல் போலியோ அற்ற நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டது. 1995ம் ஆண்டு முதன்முறையாக போலியோ ஒழிப்பு பணிக்கான சொட்டு மருந்து வழங்குவது இன்றைய தேதியில்தான் தொடங்கியது. அதுவே, தேசிய தடுப்பூசி தினமாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. 

இன்னும் பல தொற்றுநோய்கள் நம் நாட்டை அச்சுறுத்திக்கொண்டுதான் இருக்கின்றன. அவற்றில் இருந்தும் மீண்டுவர அரசுடன் பொது மக்கள் ஒத்துழைப்பும் தேவை.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close