உலக காசநோய் தினம்

  Sujatha   | Last Modified : 24 Mar, 2018 07:37 am


காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 1992ஆம் ஆண்டுமுதல் உலக காசநோய் தினம் மார்ச் 24ஆம் தேதி உலக சுகாதார அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

காசநோய் ஒரு தொற்றுநோய் என்பதை ராபர்டு கோச் என்பவர் 1882ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி கண்டுபிடித்தார்.  இந்நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச் 24ஆம் தேதியை உலகக் காசநோய் நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இதை ஏற்று 1996ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி முதல் உலகக் காச நோய் தினம் கடைபிடிக்கப்படும் என உலகச் சுகாதார அமைப்பு அறிவித்தது

காச நோய் இன்று உலகில் 1.7 மில்லியன் மக்களை ஆண்டுதோறும் கொன்று குவிக்கும் ஒரு முக்கிய உயிர்கொல்லி நோயாக உள்ளது. முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளில் இந்நோய் இன்னமும் கட்டுக்கடங்காமல் உள்ளது. மேலும், உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு பேர், இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வியர்ப்பது, கால், கைகள் பலம் குன்றுதல் போன்றவை காசநோய்க்கான அறிகுறிகளாக இனங்காணப்பட்டுள்ளன. நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவும் வாய்ப்புள்ளது.ஆனால் இது ஒரு பரம்பரை நோய் அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உலகிலேயே காச நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணியில் உள்ளது. 2012ஆம் ஆண்டு உலகச் சுகாதார அமைப்பின் புள்ளிவிவரப்படி 20 முதல் 30 லட்சம் நோயாளிகள் நம் நாட்டில் உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close