சாப்ட்டீங்களா? இன்று இட்லி தினமாம்!!

  ஐஸ்வர்யா   | Last Modified : 30 Mar, 2018 04:03 pm


உலகம் முழுவதும் பல்வேறு தினங்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2015ம் ஆண்டு முதல் மார்ச் 30ம் தேதியை உலக இட்லி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமே இல்லாம அனைவரும் பேபரைட் பு அது இட்லி தான். காலையில இட்லி, கெட்டிச் சட்னி, சாம்பார் சாப்பிடுற சுகமே தனி தான் என சொல்லும் இட்லி பிரியவர்களுக்காகவே இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது. எவ்வளவு காஸ்ட்லியான ஃபாஸ்ட் புட் சாப்பிட்டாலும் இட்லியின் ருசியை அடித்துக்கொள்ள இதுவரை எதுவுமே இல்லை. குறிப்பாக தமிழர்கள் இட்லி, சாம்பார் வாசனையிலேயே வளர்ந்தவர்கள்!

சிம்பிள செய்யக்கூடிய புட், சத்தான உணவு, எளிதில் ஜீரணித்துவிடும் என இட்லிக்கு பல சப்போர்ட் உள்ளது. அதனால்தான் மருத்துவர்கள் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளின்போது இட்லி சாப்பிடச் சொல்கிறார்கள். இட்லிக்கு பெயர் போனது ’குஷ்பு இட்லி’. இந்த பெயருக்காகவே இட்லியை குஷியோடு சாப்பிடுவோர் உண்டு.  


சங்கப் பாடல்களில் தோசையைப் பற்றி மட்டுமே தெரிவித்துள்ளனர். இட்லி பற்றிய குறிப்பு ஏதும் இல்லை என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். இந்தோனேசியாவில் இருந்த இந்து மன்னர்களின் சமையல்காரர்கள் தான் இட்லியை கண்டுபிடித்திருக்கலாம் என்றும் வட இந்தியாவில் இருந்து 800- களில் இதனை இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் கூறப்படுகிறது. 

உணவு அறிவியல் (Food Science) முறைப்படி இட்லி ஆரோக்கியமான உணவா என ஆய்வு செய்யப்பட்டது. இட்லி செய்யத் தேவையான உணவுப் பொருட்கள்: புழுங்கல் அரிசி, உளுந்து. இந்த இரண்டையும் உட்கொள்ள வேண்டியதற்கு அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளன.


பயறு வகையான உளுந்தும், தானிய வகையான அரிசியும் இணைக்கப்பட்டதால் புரதச் சமநிலையும் தரமான புரதமும் கிடைக்கின்றன. பயறு வகைப் புரதத்தில் லைசின் எனும் அமினோ அமிலம் அதிகமாகவும், தானிய வகைப் புரதத்தில் மெத்தியோனைன் என்னும் அமினோ அமிலம் அதிகமாகவும் உள்ளன. நீராவியில் வேக வைப்பதால் இட்லியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் சத்துப்பொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. இதனால் இட்லி ஆரோக்கியமானதாகவும், எளிதில் ஜீரணிக்கக்கூடியதாகவும் உள்ளதாக கருதப்படுகிறது.

உலக இட்லி தினத்தை முன்னிட்டு #WorldIdliDay என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இட்லி குறித்து பலரும் சுவையான தகவல் மற்றும் அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர்.


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close