ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சையை கண்டுபிடித்த ஜோசப் லிஸ்டர் பற்றிய அறியா தகவல்கள்

  Suja   | Last Modified : 05 Apr, 2018 07:18 am


* அறுவை சிகிச்சையின் தந்தை  ஜோசப் லிஸ்டர் இங்கிலாந்தில் உள்ள அப்ட்டன் என்னும் ஊரில் 1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் நாள் பிறந்தார். தந்தை ஜோசப் ஜாக்சன் லிஸ்டர், நவீன உருப்பெருக்கியை உருவாக்கியவர். தாயார் இசபெல்லா.

* லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றார். அறுவை சிகிச்சைக்கான பயிற்சியையும் மேற்கொண்டார்.

* அப்போதெல்லாம், நோயாளிகள் உயில் எழுதி வைத்துவிட்டுத்தான் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வருவார்கள். காரணம், காயத்தில் தொற்று ஏற்பட்டு 50% பேர் இறந்துவிடுவார்களாம். இந்த நிலையை மாற்ற தீவிர முயற்சி மேற்கொண்டார்.

* இவர் லூயிஸ் பாஸ்டர் எழுதிய நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் பற்றிய கட்டுரையை படித்தார். அதில் பொருட்களை புளிக்கச் செய்யும் கிருமிகள் காற்றில் உள்ளன. அதனால்தான் காயங்களில் விஷம் பரவுகிறது என்பதை அறிந்தார்.

* அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் கருவிகளைக் கொதிக்க வைப்பதன் மூலம் நுண்கிருமிகளை அழிக்க முடியும் என ஆய்வு செய்து கண்டறிந்தார். தற்போது பினாயில் என்றழைக்கப்படும் கார்பாலிக் அமிலத்தால் கருவிகளை சுத்திகரிக்க முடியும் என்பதை அறிந்தார். இவர் ஆன்டிசெப்டிக் அறுவை சிகிச்சை முறையை உருவாக்கினார். 

* மருத்துவ உலகிலேயே முதன்முதலாக இவருக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் விருது வழங்கப்பட்டது. இவர் ஏராளமான பட்டங்கள், பதக்கங்கள், விருதுகளையும் பெற்றார்.  அறுவை சிகிச்சையின் முன்னோடி எனப் போற்றப்படும் ஜோசப் லிஸ்டர் தனது 84வது வயதில் (1912) மறைந்தார்.


தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close