உலக சுகாதார தினம்

  Sujatha   | Last Modified : 07 Apr, 2018 08:00 am


1948ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி உலக சுகாதார நிறுவனம் (World Health Organisation) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த நாளை  உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. 

மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான சுகாதாரம் வழங்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும்.

இந்த அமைப்பின் சட்டத்தை உலகின் 61 நாடுகள், ஐக்கிய நாடுகள் சபையின் கையெழுத்திட்டன. இதன் தொடக்கத்தில் இருந்தே பெரியம்மை நோயைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போதைய முக்கியத்துவம், நோய்த்தொற்று தடுப்பதும், எய்ட்சு, மலேரியா, காச நோய் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதும் ஆகும். 

உடல்நலம் சார்ந்த உலகின் முன்னணி இதழான வேர்ல்டு ஹெல்த் ரிப்போர்ட், இந்த அமைப்பால் வெளியிடப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close