உளவுத் துறை கதைகளின் நிஜ நாயகன் டாம் கிளான்ஸி

  Suja   | Last Modified : 12 Apr, 2018 08:30 am


உலகப் புகழ்பெற்ற உளவுத் துறை சார்ந்த நூல்களைப் படைத்த அமெரிக்க நாவல் ஆசிரியர் டாம் கிளான்ஸி (Tom Clancy) பிறந்த நாளை முன்னிட்டு  (ஏப்ரல் 12). அவரைப் பற்றிய சிறு தொகுப்பு:

0 அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலம் பால்டி மோரில் (1947) ஏப்ரல் 12 ல் டாம் கிளான்ஸி பிறந்தார். இயற்பெயர் தாமஸ் லியோ கிளான்ஸி. 

0 பால்டிமோரில் உள்ள லயோலா கல்லூரியில் (தற்போது லயோலா பல்கலைக்கழகம்)  ஆங்கில இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற இவர்,  ராணுவத்தில் சேர விரும்பினார். ஆனால் அவருக்கு இருந்த பார்வைக் குறைபாடு காரணமாக அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் மனம் தளராத டாம்  ராணுவம், பனிப்போர், அரசியல் களம் ஆகியவற்றை மையப்படுத்தி நாவல்கள் எழுதினார். 

0 இவரது ‘தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர்’ என்ற நாவல் 1982-ல் வெளியானது. முதல் நாவலே விற்பனை யில் சாதனை படைத்தது. அதில் ராணுவம், பனிப்போர் பற்றிய தகவல்களை விரிவாக, சுவாரஸ்யமாக எழுதியிருந்தமையால் பணமும் புகழும் இவரைத் தேடி வந்தன.

0 இவரது கதை சொல்லும் பாணி தனித்துவமானது. நாவல்களில் உளவு, தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தாலும் சுவாரஸ்யம், நகைச்சுவை, கூர்மையான உரையாடல் ஆகியவையும் வெகு சிறப்பாக இருக்கும்.

0 மொத்தம் 28 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றில் 17 நாவல்கள் விற்பனையில் சாதனை படைத்தன. சில நாவல்கள், ராணுவ கதைக் களத்தைக் கொண்டவை. ‘நெட் ஃபோர்ஸ்’ நாவல் தொலைக்காட்சிப் படமாகத் தயாரிக்கப்பட்டது. இவரது புத்தகங்கள் ஏறக்குறைய 10 கோடி பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

0 வீடியோ கேம்களுக்கு ஆலோசனை வழங்கிவந்தார். கிளான்ஸியின் பெயர் கொண்ட வீடியோ கேம்களும் விற்பனையில் சாதனை படைத்தன.

0 தி ஹன்ட் ஃபார் ரெட் அக்டோபர், பாட்ரியாட் கேம்ஸ், கிளியர் அண்ட் பிரசன்ட் டேஞ்சர், தி சம் ஆஃப் ஆல் ஃபியர்ஸ் ஆகிய கதைகளைத் தழுவி தயாரிக்கப்பட்ட திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.

0 20-ம் நூற்றாண்டில் விற்பனையில் சாதனை படைத்த நூல்களை எழுதிய படைப்பாளிகளில் ஒருவராகப் போற்றப்படும் டாம் கிளான்ஸி 66 வயதில் (2013) மறைந்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close