கூகுள் டூடுலின் முதல் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ

  Newstm Desk   | Last Modified : 04 May, 2018 03:47 am

சினிமாவில் புதுமைகளை புகுத்திய ஜார்ஜ் மெல்லிஸைபோற்றும் வகையில் இன்று முதன் முதலாக விர்ச்சுவல் ரியாலிட்டி டூடுல் வீடியோவை பதிவிட்டுள்ளது கூகுள் நிறுவனம். 

தினமும் அந்த நாளுக்கான சிறப்பை கொண்டாடும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் டூடுலை வைத்திருக்கும். அந்த வகையில் இன்று முதன்முறையாக விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. 

சினிமாவில் பல வகையில் புதுமைகளை புகுத்தியவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜார்ஜ் மெல்லிஸ். மேஜிக் கலையில் சிறந்து விளங்கியவர். அவர் தனக்கு கிடைத்த கேமராவை வைத்து மேஜிக்கலையை மேலும் சிறப்பித்தார். அதன் பின் சிறு படங்களை உருவாக்கினார்.

பின்னர் அவர் உருவாக்கிய படங்களில் ஒளிப்பதிவிலும், படத்தொகுப்பிலும் பல்வேறு புதுமைகளை காட்டினார். இவரது முதல் படம் கார்ட் பார்ட்டி. இவர் இயக்கத்தில் வெளியான ட்ரிப் டூ த மூன் , த கிங்டம் ஆப் த ஃபேரீஸ், த இம்பாஸிபில் வாயேஜ்  போன்ற படங்கள் மிக முக்கியமானவை.

இந்நிலையில் அவரது இயக்கத்தில் 1912ம்ஆண்டு கான்குவஸ்ட் ஆஃப் த போல் படம் மே 3ந்தேதி வெளியானது. இதனை சிறப்பிக்கும் வகையில் இன்றைய டூடுலை அமைத்திருக்கிறது கூகுள். இவர் உருவாக்கிய ட்ரிப் டூ த மூன் படத்தை நினைவுப்படுத்தும் வகையில் பேக் டூ த மூன் என்ற பெயரில் 360 டிகிரியில் விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோவை குகூள் வெளியிட்டுள்ளது.


சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close