அன்னையர் தின சிறப்பு கூகுள் டூடுல்

  Newstm Desk   | Last Modified : 13 May, 2018 11:27 am

அன்னையர் தினத்திற்கான சிறப்பு கூகுள் டூடுலை இன்று கூகுள் தனது முகப்பு பக்கத்தில் வைத்துள்ளது. 

ஒவ்வொரு நாளும் அந்த நாளின் சிறப்பை நினைவூட்டும் வகையில் கூகுள் நிறுவனம் தனது முகப்பு பக்கத்தில் டூடுலை வெளியிடும். நாள் தோறும் பல சுவரஸ்யங்களுடன் வெளியிடப்படும் இந்த டூடுல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் இன்றைய கூகுள் டூடுல் அன்னையர் தினத்தை கொண்டாடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தாய் டைனோசர் தனது குட்டியுடன் இருப்பது போன்று வரையப்பட்டு உள்ளது. குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும் தாயின் தாக்கம் இருக்கும் என்பதை குறிப்பிடுவது போல இந்த டூடுல் அமைந்திருக்கிறது. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close