சர்வதேச இசை தினம்: கவலைகளை மறக்கடிக்கும் மருந்து!

  சுஜாதா   | Last Modified : 21 Jun, 2018 10:55 am
international-music-day

இசை என்பது ஒரு கலை. உலகில் இசைக்கு மயங்காதோர் எவரும் இல்லை. ஒருவர் சோகமாகவோ, மகிழ்ச்சியாகவோ இருக்கும் போது அவருடைய மனநிலையை மாற்ற கூடிய வல்லமை இசைக்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகாது. இசை பெரும்பாலானோரின் கவலையை தீர்க்கும் மருந்தாகவும், சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்கிறது. கல்யாண வீடு முதல் இழவு விழுந்த வீடு வரை அனைத்து இடங்களிலும் இசை என்பது பயணிக்கிறது.  

இத்தகைய சக்தி வாய்ந்த இசையை அனைவரிடத்திலும்  பரப்பும் நோக்கிலும், இசைத்துறையில் சாதனையை படைத்தவர்களை பாரட்டும் விதத்திலும் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி சர்வதேச இசை தினம் கொண்டாடப்படுகிறது. 

முதன்முதலாக 1982ல் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், சீனா உள்ளிட்ட 110க்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப் பிடிக்கப்படுகிறது. இன்றைய தினம் இசைக்கலைஞர்கள் இலவசமாக கலையரங்கம் தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்துவர். மற்ற விழாக்களைப் போல இல்லாமல் இந்த விழா, பாடத் தெரிந்தவரெல்லாம் பாடலாம் என கொண்டாடப்பட்டு வருகிறது.

ராக் மியூசிக், சோல் மியூசிக், பாப் மியூசிக், டிஸ்கோ, போக், சிம்பொனி உள்ளிட்ட இசைகள் உலகளவில் உள்ளன. இந்தியாவில் பெரும்பாலும் இரு விதமான இசைகள் பின்பற்றப்படுகிறது. ஒன்று வட இந்தியாவின் இந்துஸ்தானி இசை, மற்றொன்று தென்னிந்தியாவின் கர்நாடக இசை. இசையை உயிர் மூச்சாய் நினைக்கும் இசை பிரியர்களுக்கு இசை தின வாழ்த்துக்கள்.. 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close