இன்னைக்கு செல்பி எடுத்தீங்களா? இல்லைனா எடுத்துடுங்க!

  ஐஸ்வர்யா   | Last Modified : 21 Jun, 2018 08:02 pm

world-selfie-day

செல்பியை செலபிரேட் செய்யும் விதமாக இன்று சர்வதேச செல்பி தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்மார்ட்போனே உலகம் என்று மயங்கி கிடக்கும் இளசுகளின் மத்தியில் செல்பி என்பது நாள்தோறும் செய்யும் கடமைகளில் ஒன்றாகிவிட்டது. செல்பி என்ன பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படுகிறதா? இல்லை தங்களை தங்கள் ரசித்துக்கொள்வதற்காக எடுக்கப்படுகிறதா? இல்லை மற்றவர்களுக்கு விளம்பரப்படுத்த எடுக்கப்படுகிறதா? என்பது பலரும் அறியாத வினா!..

ஸ்மார்ட்போனில் சிக்கிய இளைஞர்கள் வெற்றியோ? தோல்வியோ? சந்தோஷமோ? துக்கமோ? சாப்பாடோ? தூக்கமோ? எல்லாத்தையும் செல்பி எடுத்து நான் இதை செய்தேன் என பிறர் கேட்பதற்கு முன்பே சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றன. மற்றவர்கள் எப்படியெல்லாம் செல்பி எடுக்கிறார்கள், எதையெல்லாம் செல்பி எடுக்கிறார்கள்? நாமும் அதை செல்பி எடுக்க வேண்டும் என செல்போனுடன் அலைகிறது ஒரு கூட்டம்! சில நேரங்களில் செல்பி அடிமையாக்கிவிட்டதா? என்று கூட நினைக்க வைக்கிறது. 

செல்பி என்பது வெறும் பொழுதுபோக்கிற்காக இல்லை அதுவும் ஒரு கலை என்பதை லண்டனை சேர்ந்த ஆராய்ச்சி குழு. அப்பறம் என்னங்க கலையை அறங்கேற்ற தயக்கம் ஏன்? எங்க வேணாலும் இனி செல்பி எடுக்கலாம். ‘செல்பி’ மோகத்தில் மூழ்கியுள்ள இன்றைய இளம் தலைமுறையினர் அதற்கான விளைவுகளையும் சம்பாதித்து வருகின்றனர். செல்பியால் இறந்தவர்களின் எண்ணிக்கையில் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது என்கிறது அமெரிக்காவை சேர்ந்த கார்நிகி மெலன் பல்கலைக்கழக ஆய்வு குழு. ஆங்கில அகராதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு செல்பி என்ற ஆங்கில வார்த்தை சேர்க்கப்பட்டது. இன்று உலக செல்பி தினம் கொண்டாடப்படுவதையொட்டி சமூக வலைதளங்களில் #WorldSelfieDay என்ற ஹேஷ்டேக்கில் பலரும் தங்களது க்யூட் செல்பிகளை பதிவிட்டு வருகின்றனர். 

செலபிரேட்டிஸ் கூட மட்டும்தான் செல்பி எடுக்கணும் என்ற கண்டிஷன் மாறி, விலங்குகளுடன் செல்பி, குரூப் செல்பி, என பல வகை செல்பிஸ் வந்துவிட்டது. இளைஞர்களின் செல்பி மோகத்தை பயன்படுத்தி செல்பி எக்ஸ்போர்ட்ஸ் செல்போன்களை வியாபாரமாக்கி வருகின்றனர். 

கெத்து காட்டவேண்டும் என்பதற்காக வனப்பகுதியில் விலங்குகளுடன் செல்பி எடுப்பது, பாறைகளுக்கு மேல் உயரமான இடத்திற்கு சென்று செல்பி எடுப்பது, கடல் அலைகளுக்கு நடுவே நின்று செல்பி எடுப்பது, ரயில் தண்டவாளங்களில் நின்று செல்பி எடுப்பது போன்ற விபரீத செல்பிகளை செல்பி கலைஞர்கள் தவிர்ப்பது நல்லது.  

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.