‘ஜூலியன் அசாஞ்சே’! யார் இந்த ரகசிய லீக்ஸ் வில்லன்!

  ஐஸ்வர்யா   | Last Modified : 03 Jul, 2018 02:24 pm
julian-paul-assange-founder-and-editor-of-wikileaks-the-international-non-profit-media-organization

செல்வாக்கு மிக்கவர்களின் நடவடிக்கைகளையும், ஜனநாயகத்துக்கு எதிரான குற்றங்களையும் உரக்க ஒலித்த அசாஞ்சேவின் பிறந்தநாள் இன்று. 

விக்கிலீக்ஸ் (Wikileaks) என்ற இணையதளம் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது தான் பலபேருக்கு தெரியவந்தது. உண்மையில் ஊடகங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் உறக்க சொன்னது ‘விக்கிலீக்ஸ்’. அரசு மற்றும் சட்ட விரோத நிறுவனங்களின் பாதுகாக்கப்பட்ட ரகசிய ஆவணங்களை பொது மக்களின் பார்வைக்கு கொண்டு வரும் இன்வெஸ்டிகேஷன் ஜேர்னலிஸத்தின் கண்ணாடியாக, எந்தவொரு லாப நோக்கமற்ற ஊடகமாக  'விக்கிலீக்ஸ்’ செயல்பட்டது. 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட மர்ம இணையதளமான விக்கிலீக்ஸ் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு கோடிக்கும் அதிகமான ரகசிய ஆவணங்களை வெட்ட வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததுள்ளது. 

ரகசியத் தகவல்களையும், பிரபலங்களுக்கு விரோதமான கோப்புகளையும் பகிர்வதற்கு யாரும் முன்வரமாட்டார்கள். ஆனால் விக்கிலீக்ஸ் மட்டும் அனைத்திற்கும் துணிந்து உண்மையையும், தவறையும் மக்களின் கண்ணோட்டத்திற்கு கொண்டுவரும். விக்கிலீக்ஸ் தொடங்கியதிலிருந்தே எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல் தனது பயணத்தில் அஞ்சாமல் பயணித்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே!

விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்தவர். எந்த லாபமும் இல்லாமல் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு அமெரிக்காவையே ஆட்டத்தில் விட்டவர். அவரை கைது செய்ய அமெரிக்கா துடித்தது. லண்டனில் இருந்த அவரை கைது செய்ய இங்கிலாந்து போலீசார் முடிவு செய்தனர். ஆனால், அவர் ஈக்குவடார் நாட்டு தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அமெரிக்காவிற்கு எதிராக செயல்பட்டதால் பாலியல் வன்கொடுமை பலியும் ஜூலியன் மீது சுமத்தப்பட்டது.

அமெரிக்காவில் பிறந்த இவர், தனது தேசத்திற்கு எதிராக செயல்படுவது ஏன்? பயங்கரவாதிகளின் நண்பராக இருப்பாரோ என்ற சந்தேகம் அமெரிக்க உளவுத்துறைக்கு எழுந்தது. ஈக்குவடாருக்கு சென்ற அசாஞ்சே அங்கும் சும்மா இல்லை... அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்து பல தகவல்களை வெளியிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவை திருப்பிப்போட்டு ஹிலாரியை தோற்கடித்து ட்ரம்பை அதிபர் ஆக்கியதில் அசாஞ்சே பங்கு அசராதது.

இதன்காரணமாக அசாஞ்சே பயன்படுத்தும் விக்கிலீக்ஸ் தளத்தின் ஸ்விஸ் வங்கிக் கணக்குகள், பேபால் தளத்தின் கணக்குகள், விசா மற்றும் மாஸ்டர் கார்டு கடன் அட்டைகள் என அனைத்து நிதி ஆதாரங்களும் முடக்கப்பட்டன. நிதி இல்லாமல் தகவல்களை கசியவிடுவது கடினம் என்ற தப்பான கணக்கை போட்டது அமெரிக்கா, ஆனால் அசாஞ்சே அதெற்கெல்லாம் பயப்படாமல் கண்ணாமூச்சு ஆட்டம் ஆடி ஒபாமா முதல் ஹிலாரி வரை அனைத்து ரகசியங்களையும் விக்கிலீக்ஸில் திரையிட்டு காட்டினார். அதன்பிறகு எப்போது யாரை பற்றிய தகவல்களும் வெளிவருமோ என பல தலைவர்கள் நடுங்கி கொண்டிருந்தனர். 

பலருக்கு வில்லனாகவும், சிலருக்கு ஹீரோவாகவும் உலகையே உலுக்கிய அசாஞ்சேவுக்கு நெருக்கடி அதிகமானது அதனால் வழக்கறிஞர்கள் துணையுடன் லண்டன் மாநகரக் காவல்துறையிடம் சரணடைந்தார். அத்துடன் விக்கிலீக்ஸ் அவதாரங்களும் அடங்கின...  அசாஞ்சே சிறையில் இருந்து மீண்டு(ம்) வருவாரா... விக்கிலீக்ஸின் பயணம் தொடருமா என்ற ஆவலுடன் காத்திருக்கின்றனர் அவரது ரசிகர்கள்...

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close