கூகுள் டூடுளில் ஆசிரியர் தின கொண்டாட்டம்

  சுஜாதா   | Last Modified : 05 Sep, 2018 07:47 am
google-celebrates-teachers-day-with-animated-doodle

நாடு முழுவதும் இன்று (செப்டம்பா் 5 ) ஆசிரியா் தினம் கொண்டாடப்படும் நிலையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு ஆசிாியா் தினத்தை பெருமைப்படுத்தி உள்ளது. 

ஆசிரியா் பணியை சேவையாக கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக விளங்குவோரை சிறப்பிக்கும் வகையில் ஆசிரியா் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவரும், தத்துவ மேதையான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை  ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். 

1962 ம் ஆண்டு முதல்  கொண்டாடப்பட்டு வரும் இந்நாளில் துணை குடியரசு தலைவர், நாடு முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 45 சிறந்த ஆசிரியர்களுக்கு விருதினை அளித்து கௌரவிப்பார்.       

இந்நிலையில் கூகுள் நிறுவனம் டூடுள் வெளியிட்டு ஆசிாியா் தினத்தை பெருமைப்படுத்தி உள்ளது. அதில் ஆசிரியர்கள் அணியும் கண்ணாடி, இயற்பியல், வேதியல்,  கணிதம்,  விளையாட்டு, இசை, கணினி போன்ற குறியீட்டுகளுடன் அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. 

newstm.in  

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close