கூகுளுக்கு இன்று 20வது பிறந்தநாள்- டூடுள் விவரிப்பது இது தான்....

  Newstm Desk   | Last Modified : 27 Sep, 2018 04:52 pm
google-celebrates-search-engine-s-20th-birthday

தனது 20 வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது கூகுள் தேடுபொறி தளம். 

தேடுபொறி தளங்களில் ஜாம்பவனாக திகழும் கூகுள் தொடங்கப்பட்டு இன்றோடு 20 ஆண்டுகள் நிறைவடைகிறது. ஒவ்வொரு நாளிலும் அன்றைய சிறப்பை  வடிவமைத்து அந்த நாளை சிறப்பிப்பது போல, தனது பிறந்த நாளுக்கும் கூகுள் சிறப்பு டூடுள் வெளியிடப்பட்டுள்ளது. 1.37 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில் கூகுள் இதுவரை கடந்துவந்த பாதைகள் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது. 

கூகுள் 1995ம் ஆண்டு அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்ட்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டதாரிகளான லேரி பேஜ் மற்றும் செர்ஜி ப்ரின் ஆகியோரால் தொடங்கப்பட்டது. 1998ம் ஆண்டுக்கு பின்தான் கூகுளுக்கு என பிரத்யேக லோகோ உருவாக்கப்பட்டது. அது வரையிலும் கூகுள் உலகில் உள்ள முக்கிய சின்னங்கள், நிகழ்வுகளையே தனது லோகோவாக கொண்டு செயல்பட்டது. googol என்ற வார்த்தையில் இருந்து தான் google என்ற வார்த்தை கண்டுபிடிக்கப்பட்டது. Googol என்பது ஒன்றுக்கு பக்கத்தில் 100 பூஜ்ஜியங்கள் கொண்ட எண்ணை குறிக்கும் சொல் ஆகும். ஆனால் இந்த வார்த்தை பெரும்பாலும் செயல்பாட்டில் இல்லை. 

அதிலிருந்து கூகுள் படிப்படியான வளர்ச்சியை கண்டு வருகிறது. கூகுளில் கிடைக்காத தகவலென்று ஒன்று இல்லை என்று கூறும் அளவுக்கு அதன் வளர்ச்சி தற்போது எட்டியுள்ளது. சமீபத்தில் தகவல் கசியவிடப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள் இருந்தும் பெரிய அளவிலான பாதிப்புகளை சந்திக்கவில்லை. அதன் பங்குகள் வீழ்ந்தாலும் அதிலிருந்து விடுபட்டு எழுந்து வெற்றிநடை போடுகிறது கூகுள். 

Newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close