உங்களுக்குத் தெரியுமா? இன்று உலக பார்வை தினம்!

  Newstm Desk   | Last Modified : 11 Oct, 2018 04:46 pm

world-sight-day-2018

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வியாழக்கிழமை உலக பார்வை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. குறைப்பார்வை (low vision) (பார்வை வலுக்குறைவு), பார்வையிழப்பு, பார்வைக் கோளாறுகள் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது. அனைவருக்கும் சிறந்த பார்வைத் திறனின் அவசியத்தை இந்த உலக பார்வை தினம் வலியுறுத்துகிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் 2014ம் ஆண்டு கணிப்பின் படி,  உலகம் முழுவதும் பார்வை பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 285 மில்லியன் பேராகும். இவர்களில் 39 மில்லியன் பார்வையிழந்தவர்கள். 246 பேர் குறைந்த பார்வை உடையவர்கள். திருத்தப்படாத ஒளிவிலகல் பிழைகள் (43%), மற்றும் கண்புரையே (33%) பார்வைத்திறன் இழப்பிற்கான முக்கிய காரணங்கள்.

பெரும்பாலான பார்வையிழப்புகள் (blindness) (ஏறக்குறைய 80%) தவிர்க்கக் கூடியவையே. அதாவது குணப்படுத்தக் கூடியவை அல்லது தடுக்கக் கூடியவை. பார்வையிழப்பைத் தடுப்பதே செய்யக் கூடிய மருத்துவ உதவிகளில் மிகவும் செலவு குறைந்ததும் வெற்றி அளிப்பதும் ஆகும்.

சிறந்த கண் நலத்தை எவ்வாறு பேணுவது:

► சிறந்த பார்வைக்குத் தகுந்த உணவு: கீரை, முட்டை, பீன்ஸ், காரட் ஆகியவை அடங்கிய சமநிலை உணவை உண்ணவும்.

► புகைப் பழக்கம் கண்புரை, கண் நரம்பு சேதாரம் போன்ற பார்வை தொடர்புடைய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

► சூரிய ஒளி கண்களுக்கு நல்லது. ஆனால், அதன் நேரடி விளைவைத் தவிர்க்க புற ஊதாக் கதிர் பாதுகாப்பு கண்ணாடி அணியவும். நீங்கள் ஆபத்து விளைவிக்கும் பொருட்கள் உள்ள இடத்தில் பணிசெய்தால் காப்புக் கண்ணாடி அணியவும்.

► நீங்கள் கணினியில் நீண்ட நேரம் பணி செய்வதாக இருந்தால் அவ்வப்போது இடைவேளை எடுத்து கண் உலராமல் தடுக்க அடிக்கடி இமைக்க வேண்டும்.

► தொலைக்காட்சி பார்க்கும் போதும், கணினியில் பணியாற்றும் போதும் கூச்சத் தடுப்புக் கண்ணாடி அணிவது நல்லது.
மங்கிய ஒளியில் படிக்க வேண்டாம். இதுவே கண் நலிவுக்குப் பெரும் காரணம்.

► கண் நலத்தைப் பேண முறையாகக் கண் பரிசோதனை செய்து கொள்ளவும்.

► ஜன்னல் மற்றும் ஒளியினால் உங்கள் கணினியில் கண் கூசும் ஒளி உண்டாவதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால் 
எதிர்க் கூச்சத் திரையைப் பயன்படுத்தவும்.

► கண் வில்லைகளை நீண்ட நேரம் அணிய வேண்டாம். அணிந்து கொண்டே நீச்சலடிக்க அல்லது தூங்கக் கூடாது.

► 20 நிமிடத்துக்கு ஒருமுறை 20 நொடிகள் 20 அடி தூரம் நோக்கி கண்களுக்கு ஓய்வளிக்கவும்.

newstm.in

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.